திடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்
மும்பை: தனது கார் மீது மோதி, விபத்தை ஏற்படுத்தியவர் கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல இந்திப் பட நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, மராத்தி உட்பட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில், அஜித் நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தில் மத்திய அமைச்சராக நடித்திருந்தார்.

சிட்டி ஆஃப் கோல்டு
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன், பிரபாஸின் சாஹோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மும்பையில் வசித்து வரும் இவர், தெலுங்கில் டான் சீனு, குண்டூர் டாக்கீஸ், விநயா வினேத ராமா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் தத், மகிமா நடித்த குருஷேத்ரா, சஞ்சய் தத், சுனில் ஷெட்டி நடித்த ரக்த், சிட்டி ஆஃப் கோல்டு, வாஸ்தவ் உட்பட சுமார் 20 படங்களை இயக்கி உள்ளார்.

புனே- சோலாப்பூர்
மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். தேசிய விருது பெற்றுள்ள இயக்குனரான இவர் மீது, புனே யாவத் போலீஸ் நிலையத்தில் கைலாஷ் சத்புதே என்பவர் புகார் அளித்து உள்ளார். அதில், புனே- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தேன்.

எதிர்பாராத மோதல்
அப்போது, எனது காருக்கு முன்னால் நடிகரும் இயக்குனருமான மகேஷ் மஞ்சரேக்கர் கார் சென்று கொண்டிருந்தது. அவர் திடீரென பிரேக் போட்டதால், என்னுடைய கார் அவர் கார் மீது எதிர்பாராமல் மோதிவிட்டது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய அவர், என்னிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கண்டபடி திட்டினார்.

சரமாரியாக அறைந்தார்
பிறகு திடீரென்று எனது கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து யாவத் போலீசார், நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











