சூதாட்ட செயலி விளம்பரம்.. நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு.. முக்கிய தலைகளும் சிக்கிருக்காங்க

சென்னை: சூதாட்ட செயலிகளுக்கான விளம்பரத்தில் நடிகர்கள், நடிகைகள் நடிப்பது வழக்கமாகிவிட்டது. அதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவந்தாலும் அவர்கள் அதில் நடிப்பதை நிறுத்தவில்லை. சூழல் இப்படி இருக்க விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி உள்ளிட்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

ஸ்மார்ட் ஃபோன் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அனைவரது கைகளிலும் இப்போது ஃபோன்கள் இருக்கின்றன. அது பலருக்கு வசதியாக இருக்கிறது. ஏகப்பட்ட செயலிகளும் இப்போது கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நல்லவையும் இருக்கின்றன, தீயவையும் இருக்கின்றன. அப்படி தீய விளைவுகளை ஏற்படுத்தும் செயலிகளில் முக்கியமான ஒன்றுதான் ஆன்லைன் சூதாட்ட செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

பலர் ஆபத்தில்: முன்பெல்லாம் நேரில் சந்தித்து சூதாடி தங்களது பணத்தை இழந்து வந்தார்கள். இப்போது டிஜிட்டல் உலகம் என்பதால் ஃபோனிலேயே ஆன்லைனில் பணத்தை கட்டி சூதாடிவருகிறார்கள். அப்படி சூதாடுவதற்காக வெவ்வேறு பெயர்களில் ஏகப்பட்ட செயலிகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் பணத்தை போட்டு இரட்டிப்பாக எடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டு மக்களும் பணம் போடுவதை அதிகரித்திருக்கிறார்கள்.

உயிரிழப்புகள்: இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியில் பணத்தை போட்டு இழந்தவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே இதில் சிக்கி மீள முடியாமல்; பணத்தை இழந்து, இருக்கிற சேமிப்பையும் தொலைத்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்லாம் அரங்கேறியது. அதை பார்க்கும்போதெல்லாம் பலரும் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் பிரபலங்கள் அந்த ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கிறார்கள்.

Case Filed Against Prakash Raj and 29 others for starring in online gambling advertisement
Photo Credit:

யார் யார்?: தமிழில் சரத்குமார் உள்ளிட்டோர் எல்லாம் ஆரம்பத்தில் நடித்தார்கள். அவர் அப்படி நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழ் நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி வேற்று மொழியிலும் இந்த சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். அதனைப் பார்த்து நடிகர்கள் இப்படி மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்களே என்றுதான் விமர்சனத்தை பலரும் முன்வைத்தார்கள்.

வழக்குப்பதிவு: இந்நிலையில் சூதாட்ட செயலிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள், நடிகைகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அந்த 29 பேரில் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி என முக்கிய நடிகர்களும் இருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவெடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X