twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பானுமதி ராமகிருஷ்ணா" என்ற பெயரில் படத்தை வெளியிடுவதற்கு தடைக்கோரி வழக்கு.. முடித்து வைத்த ஹைகோர்ட்!

    By Sivam
    |

    சென்னை: பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தாயாரிக்கப்பட்ட "பானுமதி ராமகிருஷ்ணா" என்ற பெயரில் இணையத்தில் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும், பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி தாக்கல் செய்துள்ள வழக்கு மனுவில், "தனது தாயார் பானுமதி ராமகிருஷ்ணா பிரபலமான நடிகை. தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகள் கொண்டவராக திரையுலகில் வலம் வந்தவர். பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வாங்கியுள்ளார். தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கேமிரா மேனான தனது தந்தை பி.எஸ். ராமகிருஷ்ணா ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    Case filed against the movie of Bhanumathi Ramakirshana

    இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் " பானுமதி ராமகிருஷ்ணா" என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது. இப்படத்தை இணையதளத்தில் வெளியிட இருக்கிறது. இப்படம் தொடர்பான டிரைலர் காட்சிகளில், எனது தாயாரின் இளமைகாலத்தில் நடந்த சம்பவங்களை தொடர்புப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த திரையுலகினர், இப்படத்தை தான்தான் தயாரிப்பதாக கூறி விசாரிக்கத் தொடங்கினர்.

    இப்படத்தில் வரும் காட்சிகள், தனது தாயாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உள்ளது. ஆகவே, தனது தாயாரின் பெயரில் பானுமதி ராமகிருஷ்ணா என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தாயாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஒரு ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    முதல் பட ஷூட்டிங் ஸ்டில்.. ஹாலிவுட் இயக்குனரின் சென்னை ஞாபகம்.. படம் இவ்வளவு நாள்தான் ஓடுச்சாம்! முதல் பட ஷூட்டிங் ஸ்டில்.. ஹாலிவுட் இயக்குனரின் சென்னை ஞாபகம்.. படம் இவ்வளவு நாள்தான் ஓடுச்சாம்!

    இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பாளர்கள் சார்பில், பிரபலமான பெயருக்கு காப்புரிமை கோரமுடியாது. படத்தின் பெயர் பொதுவான ஒன்றாகும். மனுதாரரின் தாயாரின் வாழ்க்கையை தழுவிய கதையல்ல என்று வாதிடப்பட்டது. படத்தின் தலைப்பு தாயாரின் பெயராக இருப்பதுடன், டிரைலர் காட்சிகள் அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்று வாதிடப்பட்டது.

    படம் வரும் வெள்ளியன்று வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. படத்திற்கு தடை விதித்தால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்படும். ஆகவே, படத்தின் பெயரை வேண்டுமானால் "பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா" என மாற்றி வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து, வழக்கை பைசல் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    Case filed against the movie of Bhanumathi Ramakirshana. Actress Bhanumathi's son wanted to ban the movie. But the movie team accept to change the name of the movie. Finaly case solved in High court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X