twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவேகம்... அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதிக்கக் கோரி வழக்கு!

    By Shankar
    |

    அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்குமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, முதல் 5 நாட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். அதுவும் பெரிய நடிகர்கள் நடித்த படம் என்றால் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். தற்போது நடிகர் அஜித் நடித்து இருக்கும் விவேகம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள், ரூ.200 முதல் ரூ.500 வரை அளவுக்கு அதிகமாக, சட்ட விரோதமாக ரசிகர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்கின்றன.

    Case filed against theaters collectiong excess amount for tickets

    இதை தடுக்க வேண்டும் என்று கடந்த 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, உள்துறை முதன்மை செயலாளர், வணிக வரித்துறை ஆணையர், சிறப்புக்குழு இணை ஆணையர் உள்பட பலரிடம் புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, விவேகம் திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழுக்களை மாநிலம் முழுவதும் அமைக்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி எம் துரைசாமி முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    English summary
    In a Public interest litigation a person has urged the Madras High Court to order TN govt to punish the theaters those collecting excess money for new movies from viewers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X