For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஷால் - த்ரிஷா நடிக்கும் 'சமர்' படத்தின் தலைப்புக்கு தடை கோரி வழக்கு

By Shankar
|

சென்னை: விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்கும் சமர் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு முதலில் 'சமரன்' என பெயரிட்டிருந்தனர். அந்த தலைப்பு பின்னற் 'சமர்' என மாற்றப்பட்டது. திரு இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷாவை வைத்து 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை டைரக்டு செய்தவர்.

'சமரன்' என்பதைவிட 'சமர்' பெயர் எளிதாக மக்களை சென்றடையும் என்பதால் தலைப்பை மாற்றி உள்ளோம் என்று அவர் கூறினார். ஆனால் விஷால் படத்துக்கு 'சமர்' தலைப்பை பயன்படுத்தக்கூடாது என அக்வஸ்ரே பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் மதுரை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சமர்' தலைப்பை கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னை தயாரிப்பாளர் சங்க சில்டில் பதிவு செய்தோம். 'சமர்' பெயரில் தற்போது புதுமுகங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். சக்திமோகன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் விஷால் படத்துக்கு 'சமர்' தலைப்பு வைத்துள்ளதாக விளம்பரங்கள் வந்துள்ளன. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சமர் தலைப்பை விஷால் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்," என்றார்.

Read more about: vishal விஷால்
English summary
A Madurai based producer filed case against Vishal - Trisha starrer Samar for not using the title.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more