முடித்திருத்துவோர் மனதை புண்படுத்திவிட்டார்...யோகிபாபு மீது வழக்குப்பதிவு!

சென்னை : நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு தர்மபிரபு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காமெடி ஹீரோவாக மண்டேலா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் முடித்திருத்துவோர் மனதை புன்படுத்துவம் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முடித்திருத்துவோர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மடோன் அஸ்வின்

மடோன் அஸ்வின்

இயக்குனர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கிலி முருகன், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாமானியனுக்கு ஓட்டு முக்கியம்

சாமானியனுக்கு ஓட்டு முக்கியம்

இத்திரைப்படம் ஏப்ரல் 4ந் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதில், ஒரு சாமானியனின் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் எடுத்துரைத்துள்ளது. இப்படத்தில் யோகி பாபு முடித்திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார்.

யோகி பாபு மீது புகார்

யோகி பாபு மீது புகார்

இந்நிலையில், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து யோகிபாபு மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். மேலும், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், முடித்திருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் தொழிலாளர்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. எனவே, இப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் மடோனா அஸ்வின் மற்றும் யோகி பாபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X