twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மதச் சகிப்பின்மை பற்றி பொறுப்பற்ற பேச்சு'... ஆமிர்கான் மீது டெல்லி போலீசில் புகார்!

    By Shankar
    |

    டெல்லி: மதச் சகிப்பின்மை குறித்து பொறுப்பற்ற முறையில் பேசியதாக நடிகர் ஆமிர்கான் மீது டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி நியூ அசோக்நகர் போலீசில் அங்குள்ள வசுந்தரா என்கிளேவ் பகுதியில் வசிக்கும் ஒருவர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.

    அதில் அவர், "நானும் இந்த நாட்டின் குடிமகன்தான். பிரபலங்கள் பேசுவதற்கு முன், நாம் என்ன பேசுகிறோம் என்று எண்ணிப்பார்த்து பேச வேண்டும். அமீர்கான் எந்த சமூகத்தில் வசித்து வருகிறார் என்பதை கூற வேண்டும்.. இது பொறுப்பற்றதனம். நான் அமைதியைக் குலைக்கும் செயல்," என்றும் கூறி உள்ளார்.

    Case filed on Aamir Khan

    தனது புகாருடன் இந்திய அரசியல் சட்டம் கூறியுள்ள அடிப்படை கடமைகளையும் சுட்டிக்காட்டி உள்ளார். அதில், பிரிவு இ, சமூகத்தின் அனைத்து மக்களிடமும் சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவது பற்றி கூறி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமீர்கானுக்கு எதிரான புகார் குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் குர்ஜார் கருத்து தெரிவிக்கையில், "அமீர்கான் பேச்சு பற்றி எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. அதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

    English summary
    A resident of New Delhi has filed complaint on Aamir Khan for his recent speech on 'intolerance'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X