மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: எந்நேரத்திலும் கைதாகலாம் என தகவல்!

சென்னை: மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். மாடலான மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் என பிரபலங்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்.

ஆபாச வார்த்தை

ஆபாச வார்த்தை

நடிகர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஆபாச வார்த்தைகளால் பேசி வருகிறார் மீரா மிதுன். இதனால் கடுப்பான சூர்யா மற்றும் விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கண்டப்படி விமர்சித்து வருகின்றனர். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவது வரை சென்றுவிட்டனர் ரசிகர்கள்.

மீரா மிதுன் மீது புகார்

மீரா மிதுன் மீது புகார்

நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் மிஸ் சௌத் இந்தியா அழகி போட்டி ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

5 பிரிவுகளின் கீழ்

5 பிரிவுகளின் கீழ்

இதனடிப்படையில் எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைதாகலாம்?

கைதாகலாம்?

இதனால் மீரா மிதுன் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட காவல்துறையிலும் மீரா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியி காவல் துறையிலும் மீரா மிதுன் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X