வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. காதல் கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. போலீசார் வழக்கு பதிவு!

By

கட்டாக்: தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக பிரபல நடிகை கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல ஒரிய மொழி நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சில பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். இவரும் பிரபல ஒரிய நடிகருமான அனுபவ் மொகந்தியும் சில படங்களில் ஒன்றாக நடித்தனர்.

நடிப்புடன் அரசியல்

நடிப்புடன் அரசியல்

பின்னர் காதலில் விழுந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இரு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொண்டனர். நடிப்போடு அரசியலிலும் ஈடுபட்டு வந்த அனுபவ் மொகந்தி, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

வழக்கு தொடர்ந்தார்

வழக்கு தொடர்ந்தார்

இப்போது அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் அனுபவும் வர்ஷாவும் சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில், அனுபவ் மொகந்தி தன்னை கொடுமைப் படுத்துவதாக, அவர் மனைவி வர்ஷா, சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அடித்து உதைப்பார்

அடித்து உதைப்பார்

அதில், அனுபவ் மொகந்தி குடித்துவிட்டு அடித்து உதைப்பார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்குப் பின், அனுபவ் மொகந்தியும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்யத் தொடங்கினர். விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். என்னை சினிமாவில் நடிக்கக் கூடாது என்று கொடுமை படுத்துகின்றனர் என்று கூறியிருந்தார்.

வீடு புகுந்து தாக்குதல்

வீடு புகுந்து தாக்குதல்

இந்த விவகாரம் ஒடிஷாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் அனுபவ். இதற்கிடையே நடிகை வர்ஷா, இப்போது, வரதட்சனை கேட்டு கொடுமைப் படுத்துவதாகவும் தன்னை வீடு புகுந்து தாக்கியதாகவும் புரிகாட் போலீஸில் புகார் செய்தார்.

Recommended Video

96 படம்தான் என்னோட அடையாளம் | ACTRESS VARSHA BOLLAMMA | FILMIBEAT TAMIL
வாக்குவாத ஆடியோ

வாக்குவாத ஆடியோ

தனது பெயரை கெடுக்க சதி நடப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையே அவருக்கும் அவர் கணவருக்கும் இடையே நடந்த வாக்குவாத ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார், எம்.பியும் நடிகருமான அனுபவ மொஹந்தி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X