twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி!

    |

    சென்னை: 2020ம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் கானா பாடகி இசைவாணிக்கு பிபிசி இடம் கொடுத்து கவுரவித்துள்ளது.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் ஆதரவோடு இயங்கி வரும் Casteless Collective என்ற இசைக்குழுவை சேர்ந்தவர் இசைவாணி.

    வடசென்னையின் சின்னமான கானா பாடல் உலகில் பெண்களாலும் கலக்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

    சமூக பிரச்சனை

    சமூக பிரச்சனை

    அடிமட்ட மக்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சனைகளை தங்களின் இசை பாடல்கள் மூலம் தட்டிக் கேட்கவும், அந்த பிரச்சனையை உலகிற்கு சுட்டிக் காட்டவும் கேஸ்ட்லெஸ் கலக்ட்டிவ் குழு முயன்று வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் ஆதரவில் ஏகப்பட்ட இசை நிகழ்ச்சியை உலகம் முழுவதும் இவர்கள் செய்து வருகின்றனர்.

    கானா பாடகி

    கானா பாடகி

    கானா பாடல்களை பாடுவதை பெண்கள் ஒரு இழிவாகவும் ஏளனமாகவும் நினைக்க வேண்டாம் என்றும், வடசென்னையின் அடையாளமான கானா பாடல்களை ஆண்களுக்கு நிகராக, ஏன் அவர்களை விட சிறப்பாக பெண்களாலும் பாடி அசத்த முடியும் என்பவரை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் இசைவாணி.

    பிபிசி அங்கீகாரம்

    பிபிசி அங்கீகாரம்

    2020ம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலை பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகளவில் ஏகப்பட்ட துறைகளில் சாதனை புரிந்த பெண்கள் பட்டியலில் கானா பாடகி இசைவாணிக்கும் இடம் கிடைத்து இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பா. ரஞ்சித் மகிழ்ச்சி

    பா. ரஞ்சித் மகிழ்ச்சி

    நம்முடைய கானா இசைப் பாடகியான இசைவாணியை பிபிசி நிறுவனம் அங்கீகரித்துள்ளது நமக்கெல்லாம் பெருமையான தருணம். அவருடைய பாதையில் மேலும், பல பெண்கள் துணிச்சலாக நடைபோட்டு தங்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்துவார்கள். வாழ்த்துக்கள் இசை. மகிழ்ச்சி, ஜெய்பீம் என பா. ரஞ்சித்தும் பாராட்டி உள்ளார்.

    பெண்களால் முடியும்

    பெண்களால் முடியும்

    ஆணாதிக்கம் உள்ள எல்லா துறைகளிலும் பெண்கள் அடித்து நொறுக்கி தங்களாலும் அந்த சாதனையை செய்ய முடியும் என நிரூபித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுவதில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் ஓட்டிச் செல்வது வரை ஏகப்பட்ட சாதனைகளை செய்து அசத்தி வருகின்றனர். இசைவாணியின் இந்த சாதனையும் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் இசைவாணி!

    English summary
    Pa Ranjith tweeted, “A proud moment for our very own Gana Isaivani! Congratulations Isai! Thank you BBC for this recognition. This will inspire many other women to follow Isai's path and take the centre stage! Magzhichi! Jai Bhim!”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X