»   »  பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரை அறைந்த நடிகை: வீடியோ

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரை அறைந்த நடிகை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பட வாய்ப்பு தருவதாகக் கூறி படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரை மாடலும், நடிகையுமான அமன் சந்து பொது இடத்தில் வைத்து அறைந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையும், மாடலுமான அமன் சந்துவை பாலிவுட் துணை இயக்குனர் தீபக் மிஸ்ரா என்பவர் பட வாய்ப்பு குறித்து பேச காபி கடைக்கு வருமாறு கூறியுள்ளார். அமன் தனது தோழியுடன் அந்த கடைக்கு சென்றுள்ளார்.

தீபக்கோ பட வாய்ப்பு வேண்டுமானால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அமன் கடுப்பாகி தீபக்கை கடைக்கு வெளியே இழுத்து வந்து அவரது சட்டையை பிடித்து கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் தீபக் செய்த தவறை பொதுமக்கள் முன்னிலையில் ஒப்புக் கொள்ள வைத்துள்ளார். தீபக்கை அனைவர் முன்பும் கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளார். இதை அமனின் தோழி வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.

English summary
Actress cum model Aman Sandhu slapped an assistant director in connection with casting couch issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil