முதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்!

சென்னை: பூனைக் குட்டிகளை கொஞ்சும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை அமலா பால்.

ஈஷா யோகா மையத்தில் யோகக் கலையை பயின்று வரும் அமலா பால், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள பிட்ட கதலு வெப்சீரிஸ் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தையே சூடாக்கியது குறிப்பிடத்தக்கது.

சத்குருவுடன் அமலா பால்

சத்குருவுடன் அமலா பால்

ஈஷா யோகா மையத்தில் தற்போது ருத்ராட்ச மாலையெல்லாம் போட்டுக் கொண்டு குட்டி சாமியாராகவே மாறியுள்ளார் நடிகை அமலா பால். 19 வயசிலேயே இங்கே வந்து ஆன்மிக தேடலை தான் ஆரம்பித்ததாகவும், தற்போது ஜக்கி வாசுதேவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் ஜக்கி வாசுதேவுடன் இருக்கும் போட்டோவை அண்மையில் ஷேர் செய்து வைரலாக்கினார்.

குட்டி சாமியார்

குட்டி சாமியார்

லாக்டவுனில் ஓஷோ பற்றிய தத்துவத்தையெல்லாம் பேசி வந்த அமலா பால், இப்போ ஈஷா யோகா மையத்திலேயே ஐக்கியமாகி உள்ளார். அங்கு தியான வகுப்புகளை கற்றுக் கொண்டு வரும் நடிகை அமலா பால் குட்டி சாமியார் போல யோகா செய்யும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளார்.

துணியில் கட்டித் தொங்கவிட்டு

Trapeze எனும் யோகாவை கற்று வருகிறேன் என அமலா பால் போட்ட வீடியோ நெட்டிசன்களிடம் ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியது. துணியில் அந்தரத்தில் கட்டி விட்டு, தலை கீழாக தொங்கவிட்டு, அமலா பாலை படாத பாடு படுத்தியுள்ளார் அவரது டிரெய்னர். அவரும், உடம்பில் இருக்கும் க்ரிப்னஸை அறிந்து கொள்ள இந்த யோகா உதவுகிறது என கேப்ஷன் போட்டு அந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

ஆதியோகியுடன் அமலா பால்

ஆதியோகியுடன் அமலா பால்

வெள்ளியங்கிரியில் விஸ்தாரமாக கட்டப்பட்டுள்ள ஈஷா மையத்துடன் சேர்ந்த ஆதியோகி சிவன் கோயிலில் சிவ தரிசனம் செய்த நடிகை அமலா பால், சம்போ மகாதேவா, ஓம் நம சிவாயா என்றும் சத்குரு சொன்ன வார்த்தைகளையெல்லாம் சேர்த்து கேப்ஷனாக போட்டு தனது போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

பூனைக் குட்டிகளுடன்

பூனைக் குட்டிகளுடன்

முட்டித் தெரிய ஆடை ஒன்றை அணிந்து கொண்டு, வாயில் சிரிப்புடன், உடம்பு முழுக்க பூனைகளை ஏற விட்டு செம ஹேப்பியாக அவற்றுடன் விளையாடும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு "Cat me if you can" என பூனையை வைத்து புதுசு புதுசா கேப்ஷனை எல்லாம் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

ரொம்பவே ஹேப்பி

ரொம்பவே ஹேப்பி

யோகா, ஆன்மிகம், பூனைகளுடன் விளையாட்டு என தனது வாழ்க்கையை ரொம்பவே ஹேப்பியாக வாழ்ந்து வருகிறார் நடிகை அமலா பால். பூனைக் குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் அழகான போட்டோக்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல, அந்த அளவுக்கு எல்லாமே செம க்யூட் என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

Recommended Video

Pitta Kathalu | Amala Paul, Shruthi Hassan Bed Room scenes Goes viral
அந்த வெப்சீரிஸுக்கு வெயிட்டிங்

அந்த வெப்சீரிஸுக்கு வெயிட்டிங்

ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பில் அடுத்த மாதம் 19ம் தேதி நெட்பிளிக்ஸில் தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் ஆன பிட்ட கதலு வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த வெப்சீரிஸில் அமலா பால் நடித்துள்ள ஹாட் காட்சிகள் வேற லெவலில் இணையத்தை சூடாக்கியது. பிட்ட கதலு வெப்சீரிஸில் அமலா பால் நடிப்பை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X