ஆர்யா ஹீரோயின் என்ன காதல் பற்றி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே!

By Siva

சென்னை: கண்டதும் காதல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கேத்ரீன் தெரசா.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் கேத்ரீன் தெரசா. தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் உள்ளார்.

இந்நிலையில் அவர் காதல் பற்றி கூறியதாவது,

தமிழ்

தமிழ்

தமிழ் திரையுலகில் எனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட முடிகிறது. சில படங்களில் கவர்ச்சியாக நடித்தபோதிலும் அதற்காக வெட்கப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதையே செய்கிறேன். தமிழ் படங்களில் நடிக்க அதிக அளவில் வாய்ப்பு கிடைப்பதால் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

விருப்பம்

விருப்பம்

எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றுள்ளதால் படங்களில் ஆடுவதற்கு வசதியாக உள்ளது. நான் நன்றாக நடனம் ஆடுவதாக பலரும் பாராட்டுவதை கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

கண்டதும் காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருத்தரை பார்த்தால் இவருடன் ஆயுள் முழுக்க இருக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும். இவர் நமக்கு துணையாக இருப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். அப்படி வரும் காதல் தான் உண்மையான காதல். அந்த காதலே கடைசி வரை நிலைத்து நிற்கும். வாழ்க்கையை இனிமையாக்கும்.

இல்லை

இல்லை

பார்த்தவுடன் வரும் காதல் வந்த வேகத்திலேயே முறிந்துவிடும். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. என்னை காதலிப்பதாக பலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். காதலிக்கிறீர்களா, சரி நன்றி என்று கூறி அவர்களை ஊக்குவிக்கவில்லை. தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யும் ஐடியா உள்ளது என்கிறார் கேத்ரீன் தெரசா. படங்களில் எல்லாம் கண்டதும் காதலை காட்டிக் கொண்டிருக்கும்போது அம்மணி உல்டாவாக கூறுகிறார். சரி, கருத்துகள் மாறுபடத்தானே செய்யும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X