Don't Miss!
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
‘பீஸ்ட்‘டை விடாது துரத்தும் விஜய் ரசிகர்கள்.. திக்குமுக்காடிப்போன தணிக்கை குழு தளம்!
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்திற்கு தணிக்கைக்குழு இன்று யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு இணையத்தில் வெளியான உடன், விஜய்யின் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படம் குறித்து தணிக்கை குழு தளத்தில் அதிக அளவில் தேடியதால் இணையமே திக்குமுக்காடி போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
4 பேரை காவு வாங்கிய குடிபோதை…இயக்குநரின் மகன் தற்கொலை.. நடிகை விபத்தில் பலி !

பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்குத்து
இப்படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் இணையத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். விஜய்க்கே உரித்தான கலக்கலான ஸ்டைலில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்.

புதிய சாதனை
இதையடுத்து, பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டு பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' பாடலை விஜய் பாடி உள்ளார். இந்த பாடல் குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சாதனை படைத்தது. இப்பாடலில் விஜய்யின் அழகான தோற்றமும் நடனமும் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

யூ/ஏ சான்றிதழ்
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2 மணி நேரம் 35 நிமிடங்கள் என படத்திற்கான நீளத்தையும் தணிக்கைக்குழு வெளியிட்டுள்ளது.

திக்குமுக்காடிய இணையம்
பீஸ்ட் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யூ/ஏ சான்றிதழ் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியதை அடுத்து, விஜய்யின் ரசிகர்கள் சென்சார் போர்டு இணையத்தில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அதிகம் தேடி வருவதால் இணையமே திக்குமுக்காடிப்போனதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுக்கே இப்படினா மெயின் பிக்சர் வரட்டும் சும்மா இணையமே அதிரும் என்று விஜய்யின் ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.