twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாஷேத்ராவில் முறைகேடு... மணிரத்னம் பட நடிகைக்கு எதிராக சிபிஐ வழக்கு

    By
    |

    சென்னை: மணிரத்னம் படத்தில் நடித்தவரும் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

    சென்னையில் உள்ள கலாஷேத்ரா நிறுவனம், மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கூத்தம்பலம் என்ற ஆடிட்டோரியத்தை சீரமைக்கும் பணி சில வருடங்களுக்கு முன் நடந்தது.

    CBI files case against artist Leela Samson, 4 others for alleged corruption

    இதில் ரூ.7.02 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக மத்திய கலாசாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அரசு விதிகளுக்கு எதிராக, ஒப்பந்தம் வழங்கப்பட் டதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

    ஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்கஓவர் கவர்ச்சி.. யாஷிகா, மீராவை தூக்கி சாப்பிட்ட சாக்ஷி.. என்ன மாதிரி போட்டோ போட்டுருக்காங்க பாருங்க

    இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலாஷேத்ராவில் அப்போது இயக்குனராக இருந்த லீலா சாம்சன் உட்பட 4 பேர் மீது ஊழல் மற்றும் குற்றச் சதி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.

    CBI files case against artist Leela Samson, 4 others for alleged corruption

    பத்மஸ்ரீ விருது பெற்ற லீலா சாம்சன், சங்கீத நாடக அகாடமியின் இயக்குனராகவும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவராக இருந்தவர்.

    மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓகே கண்மணி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBI has filed a case of corruption and criminal conspiracy against Leela Samson, former director of Kalakshetra Foundation, and four others for alleged irregularities in the renovation of Koothambalam Auditorium in Chennai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X