தொழிலதிபரிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற விவகாரம்... பிரபல நடிகைக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

By

கொச்சி: தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் பிரபல நடிகைக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை சிபில் அனுப்பியுள்ளது.

தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் ஜான் ஆபிரஹாம் நடித்த மெட்ராஸ் கபே ஆகிய படங்களில் நடித்தவர், நடிகை லீனா மரியா பால்.

கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பானது. சம்பவம் நடந்தபோது பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. பிரபல தாதா ரவிபூஜாரியின் ஆட்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

சுகாஷ் சந்திரசேகர்

சுகாஷ் சந்திரசேகர்

நடிகை லீனா மரியா பால், தனது காதலர் சுகாஷ் சந்திரசேகருடன் சேர்ந்து, சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம் 19 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, புழலில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பண மோசடியில்

பண மோசடியில்

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பியுமான சாம்பசிவ ராவிடம் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி 2 பேர் பணம் பறிக்க முயன்றுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், இது பற்றி ராவ் கொடுத்த புகாரை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்டவர்கள் ஐதராபாத்தைச் சேர்ந்த மணிவர்தன் ரெட்டி, மதுரையை சேர்ந்த செல்வம் ராமராஜன் என்பது தெரிய வந்தது.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

அவர்கள் இருவரும் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் காதலர் சுகாஷ் சந்திரசேகர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள். லீனா மரியா பாலின் சென்னை வீட்டிலும் கொச்சியில் உள்ள பியூட்டி பார்லரிலும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.

லுக் அவுட் நோட்டீஸ்

லுக் அவுட் நோட்டீஸ்

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் பலமுறை அழைப்பு விடுத்தும் நடிகை லீனா மரியா ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடாமல் தடுக்க, விமான நிலையங்களுக்கு இந்த நோட்டீஸ், சிபிஐ சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X