கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. த.வெ.க தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்!
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து, 110 பேர் காயமடைந்தது தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இதுவரை போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விஜய்க்கு சம்மன்: மேலும் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்துள்ளனர். அதேபோல், விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தொடர்புடைய பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முக்கிய திருப்பமாக த.வெ.க. தலைவர் விஜய்க்கே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி வரும் 12ந் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்க்கே சி.பி.ஐ. சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











