விஜயிடம் 100 கேள்விகள் கேட்ட CBI திட்டம்.. ரியல் CBIஐ முதல்முறை சந்திக்கும் ஜனநாயகன் என்ன செய்யப்போகிறார்?
டெல்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் விஜய் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 9 குழந்தைகளும் அடங்குவர். இப்படி இருக்கையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை தமிழ்நாடு காவல்துறை நடத்தக் கூடாது என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ நடத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுத்து நீதிமன்ற உத்தரவு பெற்றது விஜயின் தவெக. இந்நிலையில் கடந்த மாதத்தில் தவெக தலைமை நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், இன்று விஜயிடம் விசாரணை நடத்துகிறது.
இந்த விசாரணை இன்று தொடங்கி மொத்தம் மூன்று நாட்களுக்கு வரும் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வழக்கமாக சிபிஐ விசாரணை என்பது முதலில் கேள்விகளை கொடுத்து அவற்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலைப் பெறுவார்கள். அதன் பின்னர், அதே கேள்விகளை நேரடியாக கேட்டும் அதில் குறுக்கு கேள்விகளைக் கேட்டும் விசாரணை நடத்துவார்கள்.

கரூர் துயரம்: அந்த வகையில் சிபிஐ விசாரணைக்கு இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர் ஆனார். இதற்கான தனி விமானத்தில் டெல்லி சென்றார் விஜய். கரூர் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து இந்த விசாரணை நடைபெறுகிறது. இப்படி இருக்கும்போது, இந்த விசாரணையில் விஜயிடம் 100 கேள்விகள் கேட்க சிபிஐ திட்டமிட்டிருப்பதாகவும், முதற்கட்ட விசாரணையின் முதல் நாளில் மொத்தம் 5 மணி நேரம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதன்முதலாக: சினிமாவில் கதாநாயகனாக ஜொலித்து வந்த விஜய், இன்றுதான் முதன் முதலாக உண்மையான சிபிஐ அதிகாரிகளையும் விசாரணையையும் எதிர்கொள்ள உள்ளதால், இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தனது ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தொடர்பாக விஜய் இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருப்பதும் கேள்விக்குள்ளாகி வருவதால், விஜய் சிபிஐ-ஐ சந்திக்கச் சென்றுள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. விஜயின் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.



Click it and Unblock the Notifications











