விசாரிக்க மறுத்து முரண்டுபிடித்த சிபிஐயிடமே கலாபவன் மணி வழக்கு ஒப்படைப்பு

By Siva

திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்த வழக்கை விசாரிக்க மறுத்த சிபிஐயிடமே கேரள அரசு இன்று வழக்கை ஒப்படைத்துள்ளது.

மிமிக்ரி கலைஞராக இருந்து நடிகர் ஆனவர் கேரளாவை சேர்ந்த கலாபவன் மணி. மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்று விசாரணை நிறுத்தப்பட்டது.

மனு

மனு

கலாபவன் மணி அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவரின் மனைவியும், சகோதரரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

கலாபவன் மணியின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. தங்கள் வசம் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால் இதை விசாரிக்க முடியாது என்று சிபிஐ மறுத்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

சிபிஐ

சிபிஐ

கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து கலாபவன் மணியின் வழக்கை கேரள அரசு சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.

விசாரணை

விசாரணை

மணி இறந்து ஓராண்டுக்கு மேலாகியும் அவர் மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் நீங்கவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தியும் பலனில்லாமல் போன நிலையில் சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X