twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிபிஐக்கு மாறிய சுஷாந்த் வழக்கு.. ரியாவுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    |

    டெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது.

    மேலும், நடிகை ரியா சக்கரவர்த்தியின் இடைக்கால பாதுகாப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கப் போவதாகவும், ரியாவுக்கு தக்க தண்டைனை கிடைக்கும் என்றும் நெட்டிசன்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

    சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. சிபிஐ விசாரிக்கும்.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு.. சிபிஐ விசாரிக்கும்.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    ரியா சக்கரவர்த்தியை விசாரிக்கணும்

    ரியா சக்கரவர்த்தியை விசாரிக்கணும்

    பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு காதலி ரியா சக்கரவர்த்தி காரணமாக இருக்கலாம் என்றும், சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து 50 கோடிக்கும் மேலான பணம் காணாமல் போயுள்ளதாகவும், ரியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தையும் அவர் மீது பாட்னா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    தலைமறைவு

    தலைமறைவு

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் மும்பை போலீசார் மெத்தனம் காட்டுவதால், ரியா மீது பாட்னா போலீசாரிடம் சுஷாந்த் தந்தை புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக மும்பை விரைந்த போலீஸ் அதிகாரிகளுக்கு மும்பை போலீசும் நடிகை ரியா சக்கரவர்த்தியும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும், ரியா சக்கரவர்த்தி தலைமறைவு ஆகிவிட்டார் என்ற தகவலும் தீயாய் பரவியது.

    வழக்கை மாற்றணும்

    வழக்கை மாற்றணும்

    இந்நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்தியின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா போலீசார் ரியாவிடம் விசாரணை நடத்தக் கூடாது என்றும், அதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த விசாரணையை மும்பை போலீசுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.

    பாதுகாப்பு வழங்க முடியாது

    பாதுகாப்பு வழங்க முடியாது

    இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகை ரியா சக்கரவர்த்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதன் மூலமாக, ரியா சக்கரவர்த்தியை சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசாருக்கு எந்தவொரு தடையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    சிபிஐக்கு மாற்றம்

    சிபிஐக்கு மாற்றம்

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை பீகார் அரசு கேட்டுக் கொண்டது போல சிபிஐக்கு மாற்றப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில், தற்போது அந்த வழக்கு சிபிஐ விசாரிக்க மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுப்பிரமணியம் சுவாமி, நடிகை கங்கனா ரனாவத் மற்றும் நெட்டிசன்கள் நீதி நிச்சயம் வெல்லும் என்றும் எதிர்பார்த்த சிபிஐ விசாரணை நடக்கப் போகிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

    English summary
    No interim protection for Rhea Chakraborty from the investigation of Patna Police, Supreme Court clearly ordered. And Sushant Singh Rajput death case handed over to CBI for investigation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X