twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் பெட்ரூமில் எப்படி இருந்தார்? என்ன செஞ்சீங்க? நடிச்சு காட்டுங்க.. சாட்டையை சுழற்றும் சிபிஐ!

    |

    மும்பை: சுஷாந்த் ஜூன் 14ஆம் படுக்கையறையில் எப்படி இருந்தார் என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் அவரது சகோதரி மீத்து மற்றும் வேலைக்காரர்களுடன் வீட்டிற்கே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து மும்பை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சுஷாந்தின் உடல் ஜுஜு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

     நம்ப வேண்டாம்.. மது போதைக்கு நான் அடிமையாகி விட்டேனா..? பிரபல சூப்பர் சிங்கர் பாடகி ஆவேசம்! நம்ப வேண்டாம்.. மது போதைக்கு நான் அடிமையாகி விட்டேனா..? பிரபல சூப்பர் சிங்கர் பாடகி ஆவேசம்!

    மும்பை போலீஸ்

    மும்பை போலீஸ்

    சுஷாந்த் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மும்பை போலீசாரின் விசாரணையில் நம்பிக்கையில்லை எனக்கூறி பீகார் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் பீகார் போலீஸ்க்கு மும்பை போலீஸ் முறையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

    அனைவரிடம் விசாரணை

    அனைவரிடம் விசாரணை

    இதனால் சிபிஐ விசாரணை கோரினர் சுஷாந்தின் பெற்றோர். இதற்கு அம்மாநில அரசும் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சுஷாந்துடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எப்படி தொங்கினார்?

    எப்படி தொங்கினார்?

    இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் சுஷாந்த் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பாந்த்ராவில் உள்ள வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் தனது படுக்கையறையில் உள்ள சீலிங் ஃபேனில் எப்படி தொங்கினார்? அதைப்பார்த்ததும் வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் மற்றும் அவரது பிளாட் நண்பரான சித்தார்த் பிதானி ஆகியோர் என்ன செய்தனர் என நடிக்க சொல்லி தடயங்களை சேகரிக்கின்றனர்.

    எப்படி இருந்தார்கள்?

    எப்படி இருந்தார்கள்?

    இந்த விசாரணையில் சுஷாந்தின் சகோதரி மீத்து, சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி, நீரஜ் சிங், தீப்பேஷ் சாவந்த் மற்றும் கேஷவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுஷாந்தின் மரணம் குறித்த தகவல் அறிந்து மீத்து வீட்டிற்குள் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என மீத்துவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    துணி எங்கே இருந்தது?

    துணி எங்கே இருந்தது?

    மேலும் மீத்து வந்த போது, சுஷாந்தின் உடல் படுக்கையில் எப்படி கிடந்தது, வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் எங்கெங்கு நின்று கொண்டிருந்தார்கள்? சுஷாந்த் தூக்கில் தொங்கிய துணி எங்கே இருந்தது என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் மீத்துவிடம் விசாரித்து வருகின்றனர்.

    காதலி விட்டு சென்றதால்

    காதலி விட்டு சென்றதால்

    மீத்து சிங் ஜூன் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சுஷாந்துடன் அவரது பிளாட்டில் இருந்தார். ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 8ஆம் தேதி தனது காதலியான ரியா தன்னை விட்டு சென்றுவிட்டதாக சுஷாந்த் கூறியதால் மீத்து அவருடன் வந்து தங்கியிருந்தார்.

    தடயம் சிக்குமா?

    தடயம் சிக்குமா?

    சுஷாந்த் வழக்கில் கொலைக்கான ஆதாரம் எதுவும் இதுவரை சிக்காத நிலையில் சிபிஐ அதிகரிகள் ஏதாவது தடயம் சிக்குமா என்ற கோணத்தில் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மற்றொரு சகோதரியான பிரியங்கா சிங்கும் மறைந்த நடிகரின் வீட்டிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    CBI team reaches Sushant's Bandra house today. Meetu has been called to understand how did she find the body when she reached Sushant’s flat, how was his body lying, where was the cloth from which he allegedly hanged himself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X