சுஷாந்த் பண பரிவர்த்தனை விவகாரம்.. கார்னர் ஸ்டோன் சிஇஓவை குறி வைத்த சிபிஐ.. மீண்டும் விசாரணை!
மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்தின் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக கார்னர் ஸ்டோன் நிறுவனத்தின் சிஇஓவிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர்.
Recommended Video
சுஷாந்த் மரணமடைந்து 2 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் ஒவ்வொரு தகவலாக வெளியாகி வருகிறது. சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
சுஷாந்தின் வழக்கு கடந்த மாதம் 19ஆம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வீட்டு வேலைக்காரர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷோவிக் கைது
அதேபோல் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரியா சக்ரவர்த்தி வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்திய போதை பொருள் தடுப்புப்பிரிவினர் ரியாவின் சகோதரர் ஷோவிக்கை கைது செய்துள்ளனர்.

கார்னர் ஸ்டோன்
இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுஷாந்தின் பண பரிவர்த்தனைகள், அவருக்கு வந்த வருமானம் படங்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் உள்ளிட்டவை தொடர்பாக கார்னர் ஸ்டோன் நிறுவனத்தின் சிஇஓவான பண்டி சஜ்தேவிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர்.

சுஷாந்த் அக்கவுண்ட்
கார்னர் ஸ்டோன் நிறுவனம் ஒரு டேலன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகும். அதில் அக்கவுண்ட் வைத்துள்ள சுஷாந்த் இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான விளம்பர படங்கள் மற்றும் ஈவென்ட்டுகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கும் நிலையில் சுஷாந்த் சிங் பெற்ற வாய்ப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

சோகைல் கான் மைத்துனர்
பண்டி சஜ்தே, நடிகர் சோகைல் கானின் மைத்துனர் ஆவர். 2018ஆம் ஆண்டு தனது சகோதரியும் சோகைலின் மனைவியுமான சீமா பிறந்த நாளின் போது எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

திஷா சாலியன்
மேலும் கார்னர் ஸ்டோன் நிறுவனத்தில் தான், சுஷாந்தின் மேனேஜராக இருந்த திஷா சாலியன் பணிபுரிந்தார். சுஷாந்தின் வரவு செலவுகளையும் திஷா சாலியன்தான் பார்த்து வந்தார். இதனிடையே சுஷாந்தும் தனது அக்கவுண்ட் தொடர்பாக கடந்த மே மாதத்தில் சஜ்தேவை தொடர்பு கொண்டுள்ளார்.

அதுகுறித்தும் விசாரணை
இந்நிலையில் சஜ்தேவிடம் நடத்தப்படும் விசாரணையில், சுஷாந்த் சிங் மற்றும் திஷா சாலியன் ஆகியோரின் மரணத்திற்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்று தெரியவரும். அதே நேரத்தில் சஜ்தேவிடம் சிபிஐ அதிகாரிகள் திஷா சாலியன் குறித்தும் விசாரணை நடத்தவுள்ளனர்.

திஷா தற்கொலை
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதற்கு முன்னதாக ஜூன் 8ஆம் தேதி திஷா சாலியன் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதட்டமாக இருந்த சுஷாந்த்
அவரது தலையில் பலத்த காயம் இருந்த போதும் உடம்பில் இயற்கைக்கு மாறாக பல காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. திஷா மரணத்திற்கு பிறகு சுஷாந்த் பதட்டமாக இருந்ததாக அவரது நண்பரான சித்தார்த் பிதானி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கார்னர் ஸ்டோன் நிறுவன சிஇஓவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











