மோசடி ஜோதிடரிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம்.. நேரில் ஆஜராக பிரபல நடிகைக்கு போலீஸ் சம்மன்!
மோசடி ஜோதிடரிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம்.. நேரில் ஆஜராக பிரபல நடிகைக்கு போலீஸ் சம்மன்!
பெங்களூரு: ஜோதிடரிடம் இருந்து பண்ம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், விசாரணைக்கு ஆஜராக நடிகை குட்டி ராதிகாவுக்கு போலீசார், சம்மன் அனுப்பி உள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் யுவராஜ் சாமி. ஜோதிடரான இவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க தலைவர்களின் பெயரில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின.

மீசை மாதவன்
யுவராஜ் வங்கி கணக்கில் இருந்து நடிகை குட்டி ராதிகா, அவரது சகோதரர் ரவிராஜ் வங்கி கணக்கிற்கு ரூ.1' கோடி வரை மாற்றப்பட்டு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. நடிகை குட்டி ராதிகா, ஜனநாதன் இயக்கிய இயற்கை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா உட்பட சில படங்களில் நடித்தார்.

முன்னாள் முதல்வர்
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஷமிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் யுவராஜ் கொடுத்ததாகக் கூறிய பணம் பற்றி நடிகை குட்டி ராதிகா நேற்று முன் தினம் விளக்கம் அளித்தார். அவர் கூறியிருந்ததாவது:

வரலாற்று படம்
யுவராஜ் சாமி, என் குடும்ப ஜோதிடர். என் தந்தை நண்பரான அவர் எங்கள் குடும்பத்துடன் 17 வருடங்களாக நட்பில் இருந்து வருகிறார். அவர் வரலாற்று படத்தை தயாரிக்க விரும்பினார். 'நாட்டிய ராணி சாந்தலா' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். இதில் நடிக்க எனக்கு முதல் கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பினார்.

அரசியல் பிரமுகர்கள்
பிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார். அவ்வளவு தான். 1.25 கோடி பெற்றதாகச் சொல்வது தவறு என்று கூறியிருந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை தப்பிக்க வைக்க அரசியல் பிரமுகர்களுடன், குட்டி ராதிகா செல்போனில் பேசியதாக சில ஆடியோ வெளியாகின. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம் அளிக்கிறார்
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி அவர் இன்று காலை 11 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











