CCL 2025: சென்னை கேப்டன் ஆர்யாவைக் காணோம்.. ஆனாலும் கெத்து காட்டிய நம்ம ஹீரோஸ்!

பெங்களூரு: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. சென்னை அணியில் கேப்டன் ஆர்யா அணியில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. சென்னை அணியை விக்ராந்த் வழி நடத்தி வருகிறார்.

பெங்கால் டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை ரைனோஸ் அணி விளையாடி வருகின்றது. போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. சென்னை அணி சார்பில் பந்து வீசிய பிரபலங்கள் சிறப்பாகவே பந்து வீசினர். சென்னை அணியின் அட்டகாசமான பந்து வீச்சினால், பெங்கால் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக பெங்கால் அணி 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் விக்ராந்த் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் பெங்கால் அணி ஒரு ரன் கூட அடிக்கவில்லை.

ccl 2025 bengal tigers chennai rhinos

ஆட்டத்தின் 7வது ஓவரை கலையரசன் வீசினார். அதில் பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெம்மி 22 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை, இழந்தார். இவர் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து பவுண்டரி லைன் அருகில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். ஜெம்மி, தூக்கி அடித்த பந்தினை அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் ஜமா படத்தின் இயக்குனரும் நடிகருமான பாரி. ஜெம்மி தனது விக்கெட்டை இழந்த பின்னர், பெங்கால் அணியின் ஸ்கோர் மெல்லக் குறைந்தது.

முதல் இன்னிங்ஸ்: ஆனால் ஆட்டத்தின் 8வது ஓவரை வீசிய பரத், அந்த ஓவரில் மட்டும் மூன்று வைய்டு, இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மொத்தம் 20 ரன்களை வாரி வழங்கினார். இதனால் ரன்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த பெங்கால் அணிக்கு, ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றியது. 9 ஓவர்கள் முடியும்போது பெங்கால் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 71 ரன்கள் சேர்த்திருந்தது. இறுதியில் பெங்கால் டைகர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் குவித்தது. இதில் பெங்கால் அணி 23 பந்துகள் டாட் பந்துகளை டாட் பந்துகளாக மாற்றியுள்ளது. சென்னை அணி சார்பில் கலையரசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ccl 2025 bengal tigers chennai rhinos

சென்னை அணி: சென்னை அணி சார்பில், விக்ராந்த், சாந்தனு, ப்ரித்திவ், கலையரசன், பரத், ரமணா, ஷரன், பாரி, தசரதி, அஜய் ரோஹன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். சென்னை அணியை விக்ராந்த் வழிநடத்துகிறார். ரமணா விக்கெட் கீப்பிங் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X