CCL 2025: ஆட்ட நாயகன்.. விக்ராந்த் மட்டும் இல்லையினா.. சென்னைக்கு எப்பவோ சங்கு ஊதியிருப்பாங்க..

சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த சென்னை ரைனோஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று அதாவது, மார்ச் 2ஆம் தேதி சென்னை ரைனோஸ் அணி பஞ்சாப் தே ஷீர் அணியை வீழ்த்தினால் தனது நான்காவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் கோப்பையை வெல்லும். ஒருவேளை பஞ்சாப் தே ஷீர் அணி வெல்கிறது என்றால், அந்த அணியின் முதல் கோப்பையாக மாறும்.

CCL 2025 Vikranth Chennai Rhinos

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மாலை 6.30 மணிக்கு மைசூரில் உள்ள கே.சி.ஏ பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்படியான நிலையில், சென்னை ரைனோஸ் அணி இந்த சீசனை தொடங்கிய விதத்தைப் பார்த்த பலரும், சென்னை அணி லீக் சுற்றினைத் தாண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. காரணம் சென்னை ரைனோஸ் அணியின் சொதப்பலான பவுலிங் மற்றும் ஃபீல்டிங் தான்.

CCL 2025 Vikranth Chennai Rhinos

அப்படியான சென்னை ரைனோஸ் அணியை தனது அட்டகாசமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் திறமைதான். முதல் போட்டியில் அவரது விக்கெட் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாவது போட்டியில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சரியாக விளையாட முடியவில்லை. இதனால் மூன்றாவது போட்டியில் இருந்து அதாவது தெலுகு வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பொறுப்பாக விளையாடினார், விக்ராந்த்.

CCL 2025 Vikranth Chennai Rhinos

விக்ராந்த்: விக்ராந்த் அடிப்படையில் ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தோடு, கிரிக்கெட் முறையாக பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கிளப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்படி இருக்குபோது, தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரைனோஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். விக்ராந்த் விக்கெட்டினை கைப்பற்ற எதிரணி வீரர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே வீணாகவே போயுள்ளது.

CCL 2025 Vikranth Chennai Rhinos

ஆட்டநாயகன்: கேப்டன், பேட்ஸ் மேன் என கலக்கும் விக்ராந்த், அணிக்கு தேவைப்படும்போது எல்லாம் பவுலிங்கிலும் தனது பங்கினைக் கொடுத்துள்ளார். போஜ்புரி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சரி, அரையிறுதியில் பலமான கர்நாடகா புல்டோசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சரி, தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த சீசனில் சென்னை அணியின் முதுகெலும்பாக இருக்கிறார் விக்ராந்த். இவரது இந்த ஆட்டம் மட்டும் இன்றும் தொடர்ந்தால், சென்னை ரைனோஸ் அணி இவரது கேப்டன்சியின் கீழ் மூன்றாவது கோப்பையை வென்று வரலாற்றில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரலாற்றில் இடம் பிடிக்கும்.

CCL 2025 Vikranth Chennai Rhinos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X