CCL 2025: போஜ்புரி தபாங்ஸை வீழ்த்துவார்களா நம்ம ஹீரோஸ்? வென்றால் செமி ஃபைனல்..இல்லனா வெறும் கைதான்
சென்னை: இந்த ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. அணிகள் களமிறங்கியுள்ள இந்த சீசனில் இம்முறை மலையாள சினிமா அணி மட்டும் களமிறங்கவில்லை. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் முடிவுகளைப் பொறுத்து பார்த்தால் கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் பெங்கால் டைகர்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐந்து அணிகளும் அடுத்த இரண்டு இடங்களுக்கு போராடி வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை ரைனோஸ் மற்றும் போஜ்புரி தபாங்ஸ் அணி மோதுகிறது. இதில் சென்னை அணி பிரமாண்ட வெற்றியை பெற்றால் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்ற நெருக்கடியான சூழலில் களமிறங்குகிறது.
ஒவ்வொரு அணியும் தலா நான்கு லீக் போட்டிகளில் விளையாடும். லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்த அடிப்படையில் கர்நாடகா மற்றும் பெங்கால் அணிகள் முதல் மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சென்னை ரைனோஸ் அணியில் இம்முறை அதிகப்படியான இளம் வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பது சென்னை அணிக்கு பலமான விஷயமாக கருதப்பட்டாலும், அதே அளவுக்கு பலவீனமாகவும் உள்ளது. சென்னை ரைனோஸ் மூன்று லீக் போட்டிகளில் விளையாடி அதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. அடுத்து விளையாடிய மூன்றாவது போட்டியில், தெலுகு வாரியர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இப்போதும் நீடிக்கிறதே தவிர அரையிறுதி இன்னும் உறுதியாகவில்லை. அதற்கு இன்று நடைபெறும் போஜ்புரி அணிக்கு எதிராக இமாலய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

போஜ்புரி: இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், சென்னை அணியின் புள்ளிகள் 4ஆக உயரும், மேலும், சென்னை அணி இமாலய வெற்றியை பதிவு செய்யும் போது அதன் ரன் ரேட் உயர வழிவகுக்கும். மேலும் அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய மேலும் சில அணிகளின் வெற்றிக்காகவும் சில அணிகளின் தோல்விக்காகவும் காத்திருக்க வேண்டும்.

அரையிறுதி: அதன் அடிப்படையில் , பஞ்சாப் அணிக்கு எதிராக கர்நாடகா அணி வெற்றியைப் பெற வேண்டும். அதேபோல் தெலுகு வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றியைப் பெற வேண்டும். அதாவது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இரண்டு அணிகளும் அடுத்து தங்ககளுகான லீக் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இது மட்டும் இல்லாமல், புள்ளிப்பட்டியலில் சென்னை அணிக்கு நிகராக உள்ள பஞ்சாப் அணி மும்பை ஹீரோஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவ வேண்டும். சென்னை அணியின் வெற்றி மட்டும் இல்லாமல், மற்ற அணிகளின் வெற்றிக்காகவும் காத்திருக்க வேண்டும்.

தோல்வி: சென்னை அணியால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், வெல்ல முடியாமல் போனதற்கு காரணம், சென்னை அணியில் சில வீரர்கள் செய்யும் சொதப்பலான பர்ஃபாமன்ஸ் தான். குறிப்பாக, பவுலிங்கில் பரத் தொடர்ந்து சொதப்பிக் கொண்டு உள்ளார். அதேபோல் பேட்டிங்கில் சென்னை அணி இன்னும் அதிரடியான அதே நேரத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம், இல்லை என்றால் வெறும் கையுடன் சென்னைக்கு திரும்ப வேண்டியதுதான்.



Click it and Unblock the Notifications











