CCL 2025: சென்னை ரைனோஸ்.. அரையிறுதிக்கு தகுதி பெறுமா? குறுக்கே நிற்கும் தெலுகு வாரியர்ஸ்..
சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 7 அணிகள் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மொத்தம் நான்கு போட்டிகளை எதிர்கொள்ளும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இப்படி இருக்கும்போது இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் போட்டிகளின் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் பெங்கால் டைகர்கஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில் சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னை ரைனோஸ் அணியில் இம்முறை அதிகப்படியான இளம் வீரர்கள் விளையாடுகிறார்கள். இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை ரைனோஸ் அணி அதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. தான் விளையாடிய மூன்றாவது போட்டியில், தெலுகு வாரியர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இப்போதும் நீடிக்கிறது.

சென்னை அணிக்கு வரும் 22ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு போஜ்பூரி தபாங்ஸ் அணியுடன் போட்டி உள்ளது. இந்தப் போட்டிதான் சென்னை ரைனோஸ் அணிக்கு உள்ள கடைசி லீக் போட்டி. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று தனது புள்ளிகளை 4 ஆக உயர்த்த வேண்டும். இது மட்டும் போதாது, போஜ்புரி அணிக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்று சென்னை அணி தனது ரன்ரேட்டை எதிர்மறையில் இருந்து, நேர்மறைக்கு மாற்றவேண்டும்.
அரையிறுதி: இது மட்டும் இல்லாமல், மற்ற அணிகளும் சில போட்டிகளில் வென்றும் சில அணிகள் சில போட்டிகளில் தோற்கவும் வேண்டும். அதாவது, பஞ்சாப் அணிக்கு எதிராக கர்நாடகா அணி வெல்ல வேண்டும். அதேபோல் தெலுகு வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்கால் டைகர்ஸ் அணி வெல்ல வேண்டும். மேலும் மும்பை ஹீரோஸ் அணிக்கு எதிராகவும் பஞ்சாப் தே ஷேர் அணி தோல்வியை தழுவ வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் சென்னை அணியின் அரையிறுதி கனவு எளிதாக வசப்படும்.

ரன்ரேட்: தெலுகு வாரியர்ஸ் அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அதன் நெட் ரன் ரேட் குறைவாக உள்ளதால், அடுத்த சுற்றுக்கு முன்னேற மற்ற அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு களுக்காகவும் காத்திருக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளதால் இரண்டிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு அசால்ட்டாக முன்னேறும். தற்போது சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற போஜ்புரி அணியை வீழ்த்தவும் வேண்டும். அதே நேரத்தில் நெட் ரன் ரேட் நேர்மறையாக இருந்தால் பயமே இல்லாமல் அடுத்த சுற்றுக்கு தயாராகலாம். ஆனால் என்ன நடக்கும் என்பது இந்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும்.
ரசிகர்கள்: சென்னை அணி முன்பு போல் வலுவாக இல்லாமல், தொடர்ந்து சொதப்ப காரணமே, சென்னை அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய கதாநாயகர்கள் இல்லை. சிறப்பாக விளையடும் திறன் கொண்ட விக்ராந்துக்கு காயம் ஏற்பட்டுவிட்டதால் போட்டிகளில் சிரமத்துடனே விளையாடி வருகிறார். ரமணா இன்னும் பொறுப்பாக ஆடினால் அணியின் வெற்றியை எளிதாக்க முடியும். பரத்திற்கு ஓவர் கொடுக்காமல் இருந்தாலே, எதிரணிக்கு எக்ஸ்ட்ராஸ் மூலம் வரும் ரன்கள் குறையும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











