CCL 2025: அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை அணி... கோப்பையை வெல்லுமா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் 11ஆவது சீசன் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணி தோல்வியுற்ற நிலையில், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ரன்னிங் ரேட் அடிப்படையில், சென்னை ரைனோஸ் அணி அரையிறுதிக்கு சென்றது.
சென்னை அணி 3ஆம் இடம்: நேற்று தெலுங்கு வாரியர்ஸ் அணியும் பெங்கால் டைகர்ஸ் அணியும் குஜராத்தில் இருக்கும் லால்பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணியை தோற்கடித்து பெங்கால் டைகர்ஸ் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வெறிகொண்ட ஆட்டத்தால் தான் ஒரு பெங்கால் புலி என நடிகர் ஜம்மி பானர்ஜி நிரூபித்தார். ரன் ரேட் அடிப்படையில் பெங்கால் டைகர்ஸ் அணி முதலிடத்திலும், கர்நாடக புல்டோசர்ஸ் 2ஆம் இடத்திலும், சென்னை அணி 3ஆம் இடத்திலும் உள்ளன.

அரையிறுதி: சென்னை அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்ததை முன்பே கணிக்கப்பட்டது. அதே போன்றே தெலுகு வாரியர்ஸ் அணி தோல்வியுற்றது. தெலுகு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றாலும் ரன் ரேட்டில் மைனஸில் இருந்தது. எனவே சென்னை அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில், பைனலுக்கு செல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெற்றிக்கோப்பையை சென்னை அணி ருசிக்க வேண்டும். சென்னை, பெங்கால், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
ரசிகர்கள்: சென்னை ரைனோஸ் அணியின் ஆட்டம் முன்பு போல் இல்லை என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், பின்னால் வரும் நடிகர்கள் சொதப்புகின்றனராம். குறிப்பாக பரத்திற்கு ஓவர் கொடுக்காமல் இருந்தாலே, எதிரணிக்கு எக்ஸ்ட்ராஸ் மூலம் வரும் ரன்கள் குறையும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











