CCL 2025: பெங்கால் டைகர்ஸ் Vs பஞ்சாப் டி ஷெர். டெல்லியில் நடந்த போட்டியில் வென்றது யார்?
டெல்லி: திரையுலக நட்சத்திரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நேற்று முதல் தொடங்கியது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை ரைனோஸ், பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் பெங்கால் டைகர்ஸ் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில பெங்கால் டைகர்ஸ் Vs பஞ்சாப் டி ஷேர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், பெங்கால் டைகர்ஸ் அணியில் ஜிஸ்சு சென்குப்தா, போனி சென்குப்தா, ஜம்மி பானர்ஜி, ஜாய் முகர்ஜி, யூசுப் சிஷ்டி, சௌரவ் தாஸ், ஜோய் டெப்ராய், சதாதீப் சாஹா, ரத்னதீப் கோஷ், ஆதித்யா ராய், ரத்னதீப் கோஷ், ஆதித்யா ராய், உதய் ஜனதா பிரதாப், உதய் ஜனதா ராய், ஆனந்த சௌத்ரி ஆகியோர் களத்தில் இருந்தனர்.
பெங்கால் டைகர்ஸ் Vs பஞ்சாப் டி ஷெர்: அதே போல, பஞ்சாப் டி ஷேர் டீமில் அனுஜ் குரானா, சோனு சூட், சுயுஷ் ராய், அபர்சக்தி குரானா, பப்பல் ராய், பால்ராஜ் சாயல், பின்னு தில்லான், தக்ஷ் சிங், தேவ் கரூத், கேவி சாஹல், ஹார்டி சந்து, ஜாகிட் சந்து மே, ஜாகித் வாஹி மே, ஜாகித் வாஹி மே, மேத்தா, நவ்ராஜ் ஹன்ஸ், நிஞ்ஜா, ராகுல் ஜைதிலி, ரவுனக் பிந்தர், சாவந்த் சிங் ஆகியோர் இருந்தனர்.
பெங்கால் டைகர்ஸ் இரண்டாவது வெற்றி:இதில் பஞ்சாப் டி ஷேர் அணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.பெங்கால் டைகர்ஸ் அணி முதல் இன்னிங்கில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. அதே போல, பஞ்சாப் டி ஷேர் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது. பெங்கால் டைகர்ஸ் ஆரம்ப இரண்டு விக்கெட்டுகளைஇழந்த போதிலும் ஜம்மி பானர்ஜி மற்றும் யூசுப் சிஸ்டி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆட்டம் சூடுபிடித்தது. இதையடுத்து, யூசுப் சிஸ்டி அடித்த சிக்ஸர் மூலம் பெங்கால் டைகர்ஸ் மகத்தான வெற்றி அடைந்தது. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே பெங்கால் டைகர்ஸ் இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது.


Click it and Unblock the Notifications











