CCL 2025: அதிரடியான டீசர்.. அனல் பறக்கும் சிசிஎல் 2025 ப்ரோமோ.. நாளை முதல் மோதிக்கொள்ளும் ஸ்டார்கள்!

சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், களமிறங்கவுள்ள 7 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இம்முறை கோப்பையை வெல்ல 6 அணிகளும், அதாவது சென்னை, மும்பை, தெலுங்கு, பஞ்சாபி, போஜ்புரி, கர்நாடகா அணிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதே நேரத்தில் கடந்த முறை கோப்பையை வென்ற பெங்கால் டைகர்ஸ் அணி இம்முறையும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், செலிபிரிட்டி கிரிக்கெட் லீல் 2025 இன் டீசர் மற்றும் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20211ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி20 போட்டித் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை, சர்வதேச போட்டிகள் எப்படி நடத்தப்பட்டு வருகின்றதோ, அதேபோல், நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த முறை போட்டி நடத்தும் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது, 20 ஓவர் போட்டியை ஒரு அணி இரண்டு இன்னிங்ஸாக பிரித்து விளையாடிக் கொள்ளலாம். அதாவது 10 ஓவர் பேட்டிங் பிடித்துவிட்டு, அதன் பின்னர் 10 ஓவர் பவுலிங் செய்ய வேண்டும். அதன் பின்னர், மீண்டும் 10 ஓவர் பேட்டிங் செய்துவிட்டு, 10 ஓவர் ஃபீல்டிங் செய்ய வேண்டும்.

ccl 2025 ccl 2025 promo chennai rhinos 2025

சிசிஎல் 2025: கிட்டத்தட்ட சர்வதேச அளவில் நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டினைப் போலத்தான் என்றாலும் ஒரு இன்னிங்ஸ்க்கு 10 ஓவர்கள் தான் என்பதால், ரசிகர்களுக்கு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அதற்குள் அரங்கேறி வருகிறது. இம்முறை முதல் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியும், பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதிக்கொள்ள உள்ளது.

ccl 2025 ccl 2025 promo chennai rhinos 2025

இந்தப் போட்டி நாளை அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. நாளை மற்றொரு போட்டியும் நடைபெற உள்ளது. அதில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் தெலுகு வாரியர்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்தப் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. இரண்டு போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் நடைபெறுகிறது.

ccl 2025 ccl 2025 promo chennai rhinos 2025

தெலுகு அணி ஆதிக்கம்: 10 ஆண்டுகள் நடைபெற்றுள்ள இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் அதிக முறை கோப்பைகளை வாங்கிய அணி என்றால் அது, தெலுகு வாரியர்ஸ் அணி தான். இந்த அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. அதையடுத்து சென்னை மற்றும் கர்நாடகா அணிகள் தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மும்பை அணி ஒருமுறையும் பெங்கால் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கேரளா, போஜ்பூரி, பஞ்சாபி அணிகள் இன்னும் கோப்பையை வெல்லவில்லை. சென்னை அணியை இம்முறை ஆர்யா கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார்.

ccl 2025 ccl 2025 promo chennai rhinos 2025

டீசர்: இப்படியான நிலையில் சிசிஎல் தரப்பில் இருந்து டீசர் மற்றும் புரோமோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மறக்க முடியாத தருணங்கள், அனல் பறந்த போட்டிகளைக் கொண்டு இந்த டீசரை சிசிஎல் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளார்கள்.

ccl 2025 ccl 2025 promo chennai rhinos 2025
ccl 2025 ccl 2025 promo chennai rhinos 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X