CCL 2025: சென்னை ரைனோஸ் அணியில் களமிறங்கும் அர்னவ்?.. பிக் பாஸைத் தொடர்ந்து அடுத்த சாப்ட்டர் ஸ்டார்ட்

சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL 2025) இந்த ஆண்டு வரும் 8ஆம் தேதியில் இருந்து தொடங்குகின்றது. இந்த செலிபிரிட்டி டி20 போட்டி, கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற உள்ளது. தொடக்க நாளில் சென்னை ரைனோஸ் அணி பெங்கால் டைகர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சென்னை ரைரோஸ் அணியில் சின்னத்திரை நடிகர் அர்னவ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் சில ஆண்டுகள் கொரோனா மற்றும் இன்னும் சில காரணங்களால் போட்டி நடத்தப்படவில்லை. இம்முறை போட்டி சென்னையில் நடைபெறவில்லை. மேலும் போட்டிகள் பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கட்டாக், சூரத் மற்றும் மும்பையில் நடைபெற உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள 7 திரை உலகைச் சேர்ந்த அணிகளும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

ccl 2025 bigg boss chennai rhinos arnav

அதாவது, தமிழ், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, பெங்கால், பேஜ்பூரி, ஹிந்தி என மொத்தம் 7 மொழி திரையுலகைச் சேர்ந்த திரை பிரபலங்கள் மோதவுள்ளனர். இம்முறை மலையாள திரையுலகைச் சேர்ந்த அணி கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு அணியும் மொத்தம் நான்கு லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. லீக் போட்டியின் முடிவுகளில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அதேபோல் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். மார்ச் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

ccl 2025 bigg boss chennai rhinos arnav

சென்னை அணி: சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிரித்திவ், அசோக் செல்வன், விஷ்ணு விஷால், கலையரசன், மெச்சி சிவா, பரத், ரமணா, சத்யா, தசரதன், ஷரன், ஆதவ் மற்றும் பால சரவணன் என மொத்தம் 16 பிரபலங்கள் அணியில் உள்ளனர். இதில் ரமணா மற்றும் பிரித்திவ் விக்கெட் கீப்பர்கள் ஆக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தமுறை சென்னை அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளார்கள். சென்னை அணி இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.

ccl 2025 bigg boss chennai rhinos arnav

லைவ்: மேலும் ஆர்யா தலைமையிலான அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடப்புச் சாம்பியன் பெங்கால் டைகர்ஸ் அணியுடன் சென்னை அணிக்கு லீக் அளவில், முதல் போட்டியில் மோதுகின்றது. டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி ஸ்போர்ட்ஸ் 3 ஆகிய தொலைக்காட்சிகளில் இந்தப் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது மட்டும் இல்லாமல், சென்னை அணி விளையாடும் போட்டிகளை விஜய் சூப்பர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

ccl 2025 bigg boss chennai rhinos arnav

அர்னவ்: இந்நிலையில் சின்னத்திரை நடிகர் அர்னவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் சென்னை ரைனோஸ் அணியின் டீ சர்ட் அணிந்து கொண்டு வீடியோ எடுத்து, புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அர்னவ், நீங்கள் செலிபிரிட்டி கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக விளையாட உள்ளீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அர்னவ், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சென்னை ரைனோஸ் அணியின் ஜெர்சி கிட்டினை வாங்கியிருப்பார் என கூறி வருகின்றனர்.

சென்னை அணி போட்டிகள்: செலிபிரிட்டி கிரிக்கெட்டின் லீக் சுற்றில் சென்னை அணி, பெங்கால் டைகர்ஸ் அணியை பிப்ரவரி 8 ஆம் தேதியும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை பிப்ரவரி 14ஆம் தேதியும், பிப்ரவரி 15 இல் தெலுங்கு வாரியர்ஸ் அணியையும், பிப்ரவரி 22 இல் போஜ்புரி தபாங்ஸ் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X