CCL 2025 LIVE: முதல் போட்டியில் தோல்வியை தழுவியது சென்னை ரைனோஸ்.. பெங்கால் டைகர்ஸ் வெற்றி!
பெங்களூர்: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025 இன்று முதல் ரசிகர்களின் பேராதரவுடன் தொடங்குகிறது. சினிமாவில் ஆக்ஷனில் அதகளம் செய்து வந்த நடிகர்கள் எல்லாம் கிரிக்கெட் கிரவுண்டில் 'லப்பர் பந்து’ கெத்து போல இன்று முதல் மாறி பனை மரம் உயரத்துக்கு சிக்சர்களையும் பக்காவான பவுண்டரிகளையும் அடிக்க காத்திருக்கின்றனர்.
பிப்ரவரி 8ம் தேதியான இன்று தொடங்கும் இந்த CCL 2025 கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக விக்ராந்த் உள்ளார். மேலும், விஷ்ணு விஷால், ஜீவா, கலையரசன், மிர்ச்சி சிவா, பரத், ரமணா, சத்யா, தசரதன், ஷரன், ஆதவ் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட 16 நடிகர்கள் சென்னை ரைனோஸ் அணியில் உள்ளனார்.
2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற சென்னை அணி அதன் பின்னர் வெற்றி பெறவில்லை. அதிகபட்சமாக 4 முறை கோப்பையை தெலுங்கு வாரியர்ஸ் அணி வென்றுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்கால் டைகர்ஸ் அணி மோதுகின்றன. அந்த போட்டிக் குறித்த அனைத்து ஹைலைட்ஸ்களையும் இந்த லைவில் காணலாம்.



Click it and Unblock the Notifications