CCL 2025: கர்நாடகாவை கதறவிடுமா சென்னை ரைனோஸ்.. கிச்சா சுதீப்புடன் நேருக்கு நேர் மோதும் விக்ராந்த்!

மைசூரூ: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாளுடன் முடிவுக்கு வர உள்ளது. இதில் அரையிறுதிப் போட்டிகள் நாளையும் இறுதி போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. சென்னை ரைனோஸ் அணி பலமான கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

CCL 2025 CCL Chennai Rhinos Karnataka Bulldozers

சென்னை ரைனோஸ் அணி இந்த சீசனை சொதப்பலாக தொடங்கியது. இது மட்டும் இல்லாமல், இந்த சீசனில் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும், விக்ராந்துக்கு அடுத்தடுத்து காயம், சரியாக விளையாட முடியாமல் போனது என ஒருபுறம் அணியின் பிளஸ் மைனஸ் ஆக மாறுகிறது என்றால், மறுபுறம் பந்து வீச்சில் பரத் தாராளவாதியாக நடந்து கொள்கிறார்.

CCL 2025 CCL Chennai Rhinos Karnataka Bulldozers

ஃபீல்டிங்கில் அவ்வப்போது அசத்தல் மற்ற நேரங்களில் மனதார சொதப்பல் என, ஒரு அணியாக சென்னை ரைனோஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் கூட தனது முழு பலத்தை வெளிப்படுத்தவில்லை. இப்படி இருக்கும்போது, லீக் போட்டியில் இருந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தான் களமிறங்கிய நான்கு லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளின் வெற்றிதான் அணியை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வைத்துள்ளது.

CCL 2025 CCL Chennai Rhinos Karnataka Bulldozers

மோதல்: சென்னை ரைனோஸ் அணி இதற்கு முன்னர் லீக் போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை எதிர்கொண்டு தோல்வியை சந்தித்துள்ளது. இப்படியான நிலையில் சென்னை ரைனோஸ் அணி, அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி, நாளை அதாவது மார்ச் முதல் தேதி மாலை 6.30 மணிக்கு மைசூரில் உள்ள கே.எஸ்.சி.ஏ யுனிவர்சிட்டி கேம்பஸில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என சிசிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CCL 2025 CCL Chennai Rhinos Karnataka Bulldozers

அரையிறுதி: இரு அணிகளும் நாளை நடைபெற உள்ள போட்டிக்கு முனைப்போடு தயாராகி வருகிறார்கள். வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் இறுதிப் போட்டியில் விளையாடும். இரு அணிகளும் வெற்றிக்காக தங்களது தி பெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏற்கனவே லீக் போட்டியில் கர்நாடகா அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளதால், சென்னை அணி தனது ஆட்ட நுட்பத்தை வேறு வகையில் வெளிக்கொண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள். இந்த போட்டி ஜியோ ஹாட்ஸ்டாரிலும் சோனி ஸ்போர்ட்ஸ் 3 சேனலிலும் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது.

CCL 2025 CCL Chennai Rhinos Karnataka Bulldozers

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X