CCL 2026 Semi Final: 11 பந்துகளில் 6 சிக்ஸர்.. பெங்கால் டைகர்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை: பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் லீக் (CCL) 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில், பெங்கால் டைகர்ஸ் அணி, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
பெங்கால் டைகர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, முதல் 10 ஓவர் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது 10 ஓவர் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது. மொத்தமாக 20 ஓவர்களில் 177/6 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அர்ஜுன் நந்தகுமார் 61 ரன்களும், உன்னி முகுந்தன் 41 ரன்களும் எடுத்தனர்.

த்ரில் வெற்றி: 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்கால் டைகர்ஸ் அணி, முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. 17வது ஓவரில் பெங்கால் அணி 127/5 என்ற நிலையில் தடுமாறியது. வெற்றிக்கு இன்னும் 51 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ராகுல் மஜும்தர் அதிரடியாக ஆடி, 11 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் பெங்கால் டைகர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 178/5 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது. கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் உன்னி முகுந்தன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த போட்டியின் இறுதிப் போட்டி நாளை கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











