CCL 2026: பாலிவுட்டை பந்தாடிய விஜய் தம்பி.. சதம் விளாசியதும் தளபதி செலிபிரேஷன்.. வீடியோவை பாருங்கப்பா
சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2026 இன் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. அடுத்ததாக அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் தான் உள்ளது. இதில் வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாலிவுட்டின் மும்பை ஹீரோஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பாலிவுட் அணியை பஞ்சர் ஆக்கி உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் விக்ராந்தின் அதிரடியான சதம் சென்னை அணியின் இமாலய வெற்றிக்கு வித்திட்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது. இதில் சென்னை அணியின் கேப்டன் விக்ராந்த் வெறும் 66 பந்துகளில் 149 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரியும் 10 சிக்சர்களும் விளாசினார். அதாவது அவரது மொத்த ரன்களான 149 ரன்களில் 128 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸரிலேயே விளாசி உள்ளார்.

சென்னை வெற்றி: அதன் பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை ஹீரோஸ் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் நான்காவது அணியாக சென்னை கிங்ஸ் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
விஜயைப் போல விக்ராந்த்: இதில் சென்னை அணியின் கேப்டன் விக்ராந்த் தனது சதத்தை பூர்த்தி செய்ததும், அதை கொண்டாடும் விதமாக தனது கிளவுஸ்களைக் கழட்டி விட்டு, நடிகர் விஜய் தனது கைகளை தலைக்கு மேல் தூக்கி எப்படி அசைப்பாரோ, அதேபோல் அசைத்து தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். விக்ராந்தின் இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் 31ஆம் தேதி அரையிறுதிப் போட்டியும் பிப்ரவரி 1ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. கர்நாடகா புல்டோசர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டிரைகர்ஸ் மற்றும் வேல்ஸ் சென்னை கிங்ஸ் என நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











