நடிகர்கள் மோதும் சிசிஎல் 4... ஜனவரி 25 மும்பையில் போட்டிகள் தொடக்கம்
சென்னை: இந்திய சினிமா நடிகர்கள் பங்குபெறும் சிசிஎல் -4 எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் துவங்குகிறது. இதில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட சினிமா கலைஞர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
ரசிகர்களிடம் அதிக ஆதரவைப் பெற்ற இந்த சினிமா நட்சத்திரப் போட்டியில் சுமார் 200 சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கடந்தாண்டு டிசம்பர் 20ந்தேதி நடைபெற்ற இப்போட்டிகளுக்கான துவக்க விழாவில் 'கிரிக்கெட் கடவுள்' என அழைக்கப் படும் சச்சின் டெண்டுல்கர் அவரது மனவியோடு சேர்ந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மும்பையில்....
மும்பையில் 25-ந்தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை ரைனோஸ் எனும் தமிழ் நடிகர்கள் அணி, மும்பை ஹீரோஸ் எனும் இந்தி நடிகர்கள் அணியோடு மோதுகிறது. இரவு 7 மணிக்கு வீர்மராத்தி அணியும் போஜ்புரி அணியும் மோதுகிறது.

பெங்களூரில்....
26-ந்தேதி காலை கேரள நடிகர்கள் அணியும் தெலுங்கு நடிகர்கள் அணியும் மாலை 3 மணிக்கு பெங்களூரில் மோதுகின்றனர். 7 மணிக்கு கன்னட நடிகர்கள் அணிக்கும், பெங்கால் டைகர்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது.

சென்னையில்....
பிப்ரவரி 1-ந்தேதி துபாயில் இந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 2-ந்தேதி சென்னையில் போஜ்புரி, இந்தி, சென்னை, கன்னட நடிகர்கள் அணிகள் மோதுகின்றன.

இறுதிப் போட்டி....
பிப்ரவரி 22ந் தேதி பெங்களூரில் அரையிறுதி போட்டிகளும், 23ந் தேதி ஐதராபாத்தில் இறுதி போட்டியும் நடக்கிறது.

அணிகள்....
8 அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் ஏ அணியில் கர்நாடாக புல்டோசர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், போஜ்புரி டபான்ங்ஸ், மும்பை ஹீரோஸ் அணிகள் மற்றும், பி அணியில் தெலுங்கு வாரியர்ஸ், வீர் மராத்தி, சென்னை ரெய்னோஸ், பெங்கால் டைகர்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் நடிகர்கள்....
தமிழ், நடிகர்கள் அணியில் விஷால், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, சிவா, சாந்தனு, பிரித்வி, ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், ஜித்தன் ரமேஷ், ரமணா, உதய் போஸ், வெங்கட் சஞ்சய், நிதின் சத்யா, பிரேம்குமார், ஷரண், சுந்தர்ராமு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

வர்ணனை...
காமெடி நடிகர் கபில் சர்மா மற்றும் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி மந்திரா பேடி ஆகியோர் இந்தக் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வர்ணனை வழங்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











