twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிசிஎல் 6: தொடரிலிருந்து வெளியேறிய சென்னை ரைனோஸ்... கேப்டனை மாத்தியும் வெற்றி கிடைக்கலையே!

    By Manjula
    |

    சென்னை: சிசிஎல் எனப்படும் நட்சத்திரக் கிரிக்கெட் தொடரிலிருந்து தனது மோசமான ஆட்டம் காரணமாக வெளியேறி இருக்கிறது சென்னை ரைனோஸ் அணி.

    புதிய கேப்டன் ஆர்யா தலைமையில் இந்த வருடம் களமிறங்கிய சென்னை ரைனோஸ் மோசமான பந்துவீச்சின் காரணமாக 3 போட்டிகளில் வரிசையாக தோல்வியை சந்தித்தது.

    இதனால் இந்தத் தொடரின் ஆரம்பக் கட்டத்திலேயே சென்னை ரைனோஸ் அணி போட்டிகளில் இருந்து வெளியேறி இருக்கிறது.

    சிசிஎல்

    சிசிஎல்

    பிரபல நடிகர்களை வைத்து மொழிவாரியாக உருவாக்கப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் வருடாவருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி, மும்பை, பெங்கால் மற்றும் பஞ்சாபி என்று மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாடும்.இந்தப் போட்டிகள் தற்போது வெற்றிகரமாக 6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    சென்னை ரைனோஸ்

    சென்னை ரைனோஸ்

    சரத்குமார், விஷால் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வருடம் நடிகர் ஜீவா சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் நடிகர் ஆர்யா கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    கர்நாடகா புல்டோசர்ஸ்

    கர்நாடகா புல்டோசர்ஸ்

    முதல் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியை சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணி சுமார் 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    தெலுங்கு வாரியர்ஸ்

    தெலுங்கு வாரியர்ஸ்

    2 வது போட்டியில் இளம் நடிகர் அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

    கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ்

    கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ்

    ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி பாலா தலைமையிலான கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.பின்னர் விளையாடிய கேரளா அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெற்றியின் மூலம்

    வெற்றியின் மூலம்

    இந்த வெற்றியின் மூலம் பாலா தலைமையிலான கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்றதன் மூலம் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறி இருக்கிறது.

    2 ஆண்டுகள்

    2 ஆண்டுகள்

    2011 மற்றும் 2012 ம் ஆண்டில் சிசிஎல் கோப்பையை வென்ற சென்னை ரைனோஸ் அணி, இந்த வருடம் ஒரு வெற்றி கூட பெறாமல், தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. சென்னை ரைனோஸின் இந்த வீழ்ச்சியைக் கண்டு கோலிவுட்டினர் மட்டுமின்றி ரசிகர்களும் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கேப்டனை மாத்தியும் வெற்றி கிடைக்கலையே பாஸ்!

    English summary
    CCL 6: Due to his Poor form Arya's Chennai Rhinos, now exit from the Stars Cricket League.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X