»   »  சிசிஎல்: சரத்குமார், விஷாலைத் தொடர்ந்து ஜீவாவும் 'கேப்டன்' பொறுப்பைத் துறந்தார்!

சிசிஎல்: சரத்குமார், விஷாலைத் தொடர்ந்து ஜீவாவும் 'கேப்டன்' பொறுப்பைத் துறந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிசில் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நடிகர் ஜீவா பதவி விலக, அவருக்குப் பதிலாக நடிகர் ஆர்யாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிரபல நடிகர்களை வைத்து மொழிவாரியாக உருவாக்கப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் வருடாவருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறும்.

CCL: Jeeva Deviation in Chennai Rhinos Captain

ஒவ்வொரு வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி, மும்பை, பெங்கால் மற்றும் பஞ்சாபி என்று மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாடும்.

இந்நிலையில் சிசில் நட்சத்திரக் கிரிக்கெட்டின் சென்னை ரைனோஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நடிகர் ஜீவா திடீரென்று விலகியிருக்கிறார்.

தொடர்ந்து தனது படங்கள் தோல்வியடைவதால் இனிமேல் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஜீவா முடிவெடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதால் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை என்றுதான் ஜீவா இந்த முடிவிற்கு வந்தாராம்.

ஜீவாவிற்குப் பதிலாக நடிகர் ஆர்யாவை சென்னை ரைனோஸ் அணியின் புதிய கேப்டனாக நியமித்து இருக்கின்றனர்.சிசில் ஆரம்பித்த புதிதில் சரத்குமார் கேப்டனாக இருந்தார்.

பின்னர் விஷால் வசம் வந்த கேப்டன் பதவி அடுத்து ஜீவாவுக்கு வந்து தற்போது ஆர்யாவிற்கு கிடைத்திருக்கிறது.இவராவது இந்தப் பதவியில் நீடித்திருப்பாரா? பார்க்கலாம்.

English summary
CCL: Sources Said Actor Jeeva Step Down as Captain of the Cricket Match, now actor Arya Elected to Replace Him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil