ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களோடு சுதந்திர தினத்தை கொண்டாடலாம்
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சோனியின் ஹோம் என்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் ஏ.ஆர். ரஹ்மானின் தேசபக்தி பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது.
சுதந்திர தினத்தையொட்டி கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சோனி டி.ஏ.டி.சி.யின் ஹோம் என்டர்டெய்ன்மென்ட் சர்வீசஸ் சுதந்திர தினத்திற்காக ஸ்பெஷல் ஆல்பத்தை ரிலீஸ் செய்துள்ளது.
இந்த ஆல்பம் முழுவதும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தேசபக்தி பாடல்கள் உள்ளன.

தி சவுண்ட் ஆஃப் ஃப்ரீடம்
ஏ.ஆர். ரஹ்மானின் தேச பக்திப் பாடல்கள் அடங்கிய ஆல்பத்தின் பெயர் தி சவுண்ட் ஆஃப் ஃப்ரீடம்.

தாய் மண்ணே வணக்கம்
ரஹ்மான் இசையமைத்து பாடிய தாய் மண்ணே வணக்கம் என்ற பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.

ரங் தே பசந்தி
ஆமீர் கான் நடித்த ரங் தே பசந்தி படத்தில் வரும் ரங் தே பசந்தி என்ற பாடலும் இந்த ஆல்பத்தில் உள்ளது.

விலை ரூ.175
தி சவுண்ட் ஆஃப் ஃப்ரீடம் ஆல்பம் கடைகளிலோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தோ வாங்கலாம். ஒரு ஆல்பத்தின் விலை ரூ.175.
சுதந்திர தினத்தை வித்தியாசமாய் கொண்டாட ஒரு வாய்ப்பு!


Click it and Unblock the Notifications











