எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்....வெப் தொடரில் வருகிறார் எம்ஜிஆர்
எம்ஜிஆரின் கனவான பொன்னியின் செல்வனில் அவர் நடிக்க நினைத்து முடியாமல் போனது. தற்போது அஜய் பிரதீப் இயக்கத்தில் உருவாகும் பன்மொழி பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்க, எம்ஜிஆரும் படத்தில் காதாநாயகனாக இரட்டைவேடத்தில் வருகிறார். இது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு விஷயமாகும்.
Recommended Video




கல்கியின் பொன்னியின் செல்வன்
எம்ஜிஆர் புகழ்பெற்ற நடிகராக இருந்த காலத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க நினைத்தார். அது அவரது திரையுலக பயணத்தின் லட்சியமாக இருந்தது. ஆனால் காலம் அதற்கு அனுமதிக்கவில்லை. பிரம்மாண்ட பொருட்செலவு, எம்ஜிஆர் பிசியானது போன்ற காரணங்களால் படம் எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் கருணாநிதியும் கதைவசனம் எழுதி டிவி சீரியலாக எடுக்க முயன்று 26 எபிசோடுகள் எடுக்கப்பட்ட நிலையில் அடுத்து முடியாமல் நிறுத்தப்பட்டது. தற்போது மணிரத்னம் இப்படத்தை எடுத்து வருகிறார்.

பெரும் நிறுவனங்கள் இணையும் படம்
எம்.ஜி.ஆரின் கனவை அவரது கதாநாயகியின் மகன் நிறைவேற்றுகிறார். எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. இந்தக்கதையை வெப் தொடராகவும், பன்மொழி திரைப்படமாகவும் உருவாக்க அஜய் பிரதீப் எனும் இயக்குநர் முயற்சி எடுத்துள்ளார். முற்றிலும் புதுமையான முறையில் வரவேற்பை இப்படைப்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன. பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த அகில இந்திய படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

பெரும் நிறுவனங்கள் இணையும் படம்
ஜெனோவா' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் தான் அஜய் பிரதீப். இவரது தந்தையான கிருஷ்ணன் தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர்களின் ஒருவராவார். இவர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் ஆவார். பழம்பெரும் ஒளிப்பதிவாளரான கே எஸ் பிரசாத்தின் உதவியாளராக பணிபுரிந்துள்ள அஜய் பிரதீப், எண்ணற்ற விளம்பர படங்கள் மற்றும் அரசு மற்றும் இதர ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.
ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன. பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த அகில இந்திய படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

பெரும் வெப் தொடர்
வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்று இயக்குநர் கூறினார். அதை தவிர இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ளது. வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார். பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்கின்றனர்.

இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் வருகிறார்
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (ஜனவரி 17) இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று அஜய் பிரதீப் கூறினார். எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, மூன்று போஸ்டர்களும் வெளியிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான கலைஞர் கருணாநிதிக்கும் இந்த பிரமாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் முழு அறிவிப்பு
படத்தைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் விரைவில் வெளியாகும். எம்.ஜி.ஆருடன் இயக்குநர் அஜய் பிரதீப் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் கண்ணுக்கு விருந்தாக இப்படம், வெப்தொடர் அமையும் என்பதில் சந்தேகமில்லை, காரணம் ரியல் பாத்திரங்களுடன் எம்ஜிஆரின் இரட்டைவேடமும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்.


Click it and Unblock the Notifications











