பாசிட்டிவ் விமர்சனம்… மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்.. பிரபலங்கள் பாராட்டு மழையில் தாராள பிரபு!
சென்னை: ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள தாராள பிரபு படத்தை பார்த்த பல பிரபலங்கள் அந்த படத்தை வாயாற பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தைத் தொடர்ந்து, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில், தற்போது தாராள பிரபுவாக மாறியுள்ளார்.

இந்தி பட ரீமேக்
கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் தாராள பிரபு. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆயுஷ்மான் குரானாவின் அறிமுக படமும் இதுதான். சுஜித் சர்கார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தை தற்போது தமிழில் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி உள்ளார்.

ரொம்ப என்ஜாய் பண்ணேன்
தளபதி விஜய்யின் பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, இன்று வெளியாகி உள்ள தாராள பிரபு படத்தை பார்த்து, ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்ணதாகவும், ஹரிஷ் கல்யாணின் திறமையான நடிப்பு மற்றும் விவேக் சாரின் புத்திசாலித்தனமும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இயக்குநருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

சீக்கிரம் பார்க்கிறேன்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தாராள பிரபு படம் இன்று வெளியான நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், நிச்சயம் படம் செம காமெடியாக இருக்கும் என்றும், சீக்கிரமே தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

மூன்று படங்களும்
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு, இந்த வாரம் வெளியாகி உள்ள தாராள பிரபு, அசுரகுரு மற்றும் வால்டர் ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெறட்டும் என வாழ்த்தியுள்ளார். இன்று வெளியாகி உள்ள மூன்று படங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் தாராள பிரபு வெற்றிநடை போடுகிறது.


Click it and Unblock the Notifications











