இதயம் நொறுங்கி விட்டது… புனித் ராஜ்குமார் மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் !
சென்னை : கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
Recommended Video
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திடீர் மாரடைப்பு
புனித் ராஜ்குமார் அன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை ளி அளிக்கப்பட்டது. இதையடுத்து 11.40 மணி அளிவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

இரங்கல்
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

என்னால் நம்ப முடியவில்லை
புனித் ராஜ்குமாரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. நான் தம்பியை இழந்தது போல் உணர்கிறேன். எனக்கு நெருக்கமான உறவு இருக்கும் அவரது குடும்பத்துக்கு என் ஆறுதல்கள், பிரார்த்தனைகள். இந்த இழப்பைச் சமாளிக்கும் பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுகிறேன். என பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்தேன்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். நான் சந்தித்த, பழகிய மிகவும் எளிமையான மனிதர்களில் அவரும் ஒருவர். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். என பதிவிட்டுள்ளார்

இதயம் நொறுங்கியது
இதயத்தை நொறுக்கும் செய்தி. இவ்வளவு சீக்கிரம் விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள். நீங்கள் இல்லாத குறையை உணர்வோம்.

பேரழிவை உணர்கிறேன்
போய்விட்டது...எங்கள் அன்பான, அழகான மற்றும் உன்னதமான ஆத்மாக்களில் ஒன்று. நான் என்ன உணர்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் பேரழிவை உணர்கிறேன். சகோ நீங்கள் எங்களை மிகவும் குழப்பத்திலும் மனதையும் உடைத்து விட்டீர்கள். இது உண்மையல்ல என்று நான் இன்னும் நம்புகிறேன்.


Click it and Unblock the Notifications











