'கத்திக் கத்தி தொண்டை கட்டிக்கிச்சு... ' - 'மெர்சல்' பார்த்த பிரபலங்களின் ட்வீட்

By Vignesh Selvaraj

Recommended Video

'கத்திக் கத்தி தொண்டை கட்டிக்கிச்சு.. 'மெர்சல்' பார்த்த எஃபெக்ட்

சென்னை : 'மெர்சல்' படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் முன்பதிவு இந்த வாரம் முழுவதும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.

இந்நிலையில் மெர்சல் படத்தை முதல்நாளான நேற்றே பல திரைப் பிரபலங்கள் பார்த்துள்ளனர். இயக்குனர் அட்லீ அதிகாலை ஷோவே சென்னை வெற்றி திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

விஜய்யின் மூன்று வேடம், மூன்று நாயகிகள், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படம், ஏ.ஆர். ரகுமான் மற்றும் விஜய்க்கு 25-வது வருடம் என இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. ரசிகர்களைத் தாண்டி பிரபலங்களும் படத்தைப் பற்றி ட்விட் செய்து வருகின்றனர்.

தளபதி ஆன் ஃபயர்

தளபதி ஆன் ஃபயர். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறா விஜய். மெர்சல் - டைட்டிலே எல்லாத்தையும் சொல்லும்.

விழாக்கால கொண்டாட்டம்

முதல் நாள் முதல் காட்சி பார்த்த காஸ்ட்யூம் டிஸைனர் ஜோய் க்றிஸில்டா, 'விழாக்கால கொண்டாட்டத்தை தியேட்டரில் உணர முடிகிறது.' என பட்டாசு வெடிக்கும் வீடியோவையும் பதிவேற்றியுள்ளார்.

பெரிய வெற்றி

மெர்சல் டீம் பெரிய வெற்றி பெற நல்வாழ்த்துகள். என படகுழுவினரை வாழ்த்தியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மாஸ் பண்ணிட்டீங்க

'விஜய் அண்ணா மாஸ் பண்ணிட்டீங்க' என படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.

நல்ல கருத்து

விஜய் அண்ணா உயர்ந்து நிற்கிறார். செமயா பண்ணியிருக்கார். படத்தில் மக்களுக்கான நல்ல கருத்தும் இருக்கிறது என முதல் காட்சி பார்த்த நடிகர் ஹரீஷ் கல்யாண் ட்வீட் செய்திருக்கிறார்.

விஜய் நாப்பத்து எட்டடி

கமல் எட்டடி பாய்ஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி பாய்கிறார் என மெர்சல் படம் பார்த்த நடிகை கஸ்தூரி ட்வீட் செய்திருக்கிறார்.

முற்றிலும் பிரமாதம்

' 'மெர்சல்' படம் முற்றிலும் பிரமாதமாக இருக்கிறது. விஜய் சார் செம்ம... சூப்பர்ஸ்டார். வாழ்த்துகள் டைரக்டர் அட்லீ. செம வொர்க்' என பாராட்டியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.

தொண்டைக் கட்டிடுச்சு

எனக்கு தொண்டைக் கட்டியிருக்கிறது. இதிலிருந்தே விஜய் அண்ணாவை எவ்வளவு ரசித்திருக்கிறேன் என்பது புரியும். மாஸ் & க்ளாஸ். தளபதி கேரக்டரை பார்க்கும்போது புல்லரிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X