இது எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மீண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்.. பிரபலங்கள் உருக்கம்

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு மாறி இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended Video

SPB மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனைக்கு விரைந்த Kamal

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

அவரது உடல் நிலை சீராகி வந்த நிலையில், தற்போது மீண்டும் கவலைக் கிடமாக உள்ளார் என அறிக்கை வெளியாகி இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியளவில் பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. லேசான கொரோனா பாதிப்பு தான் விரைவில் குணமாகி வருவேன் என வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவலைக் கடலில் ஆழ்த்தாமல் பார்த்துக் கொண்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

மோசமானது

மோசமானது

ஆனால், அவரது உடல் நிலை மிகவும் மோசமானது என அறிவிப்புகள் வெளியான நிலையில், ஒட்டுமொத்த திரைத் துறை பிரபலங்களும், கோடிக்கணக்கான இசை உலக ரசிகர்களும் அவருக்காக மிகப்பெரிய பிரார்த்தனைகளை செய்தனர். வீதியில் இறங்கி மெழுகுவர்த்தி ஏந்தியும் ஏகப்பட்ட ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

சீராகி வருகிறார்

சீராகி வருகிறார்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்த தவறான தகவல் ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, அவரது உடல் நிலை குறித்த அப்டேட்களை ரசிகர்களுக்காக ஆங்கிலத்தில் சொல்லி வந்தார். அப்பா குணமாகி வருகிறார் என அவர் சொல்வதை கேட்டு ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.

வீட்டுக்குப் போக ஆசைப்படுகிறார்

வீட்டுக்குப் போக ஆசைப்படுகிறார்

கடைசியாக எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட அப்டேட்டில் அப்பா உடல் நிலை சீராகி வருகிறது. சீக்கிரமே வீட்டுக்குப் போக ஆசைப் படுகிறார் எனக் கூறி இருந்தார். மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து எழுதிய வார்த்தைகளும், திருமண நாளை ஐசியுவிலே கொண்டாடிய தருணங்களும் ரசிகர்களுக்கு இன்பம் அளித்தது.

மீண்டும் உடல் நலக் குறைவு

மீண்டும் உடல் நலக் குறைவு

இந்நிலையில், தற்போது எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், உயர்தர உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிற அவசர அறிவிப்வை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதனை அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது பிரார்த்தனைக்கான நேரம்

இது பிரார்த்தனைக்கான நேரம்

இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது மீண்டும் பிரார்த்தனைக்கான நேரம் என்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என அவருடைய அனைத்து ரசிகர்களும் மீண்டும் ஒரு முறை பலமாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் ட்வீட்

தேவி ஸ்ரீ பிரசாத் ட்வீட்

இசையமைப்பாளர் தமனை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிராசாத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக வேண்டும் எனவும், விரைவில் குணமாகி அவர் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனக்கு நம்பிக்கை இருக்கு, உலகிற்கு சந்தோஷத்தை கொடுத்த அவர் மீண்டும் வருவார் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X