சார்பட்டா பரம்பரை.. வேற லெவல் ட்ரெயிலர்.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஹார்டுவொர்க்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெயிலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சார்பட்ட பரம்பரை. இப்படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பாக்சிங் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வரும் 22ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹேஷ்டேக்ஸ் ட்ரென்டிங்

ஹேஷ்டேக்ஸ் ட்ரென்டிங்

ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். #Arya, #SarpattaParambarai ஆகிய ஹேஷ்டேக்குகளையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் சார்பட்டா பரம்பரை ட்ரெயிலரை கொண்டாடி வருகின்றனர்.

கடின உழைப்பு தெரியுது

கடின உழைப்பு தெரியுது

இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் சார்பட்டா பரம்பரை ட்ரெயிலர் குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில், சார்பட்டா பரம்பரை உலகத்துக்குள் செல்ல காத்திருக்க முடியாது. காவிய ட்ரெயிலர்.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஆர்யா மற்றும் ரஞ்சித்தின் கடின உழைப்பு தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

கிராக்கிங் ட்ரெயிலர்

கிராக்கிங் ட்ரெயிலர்

இதேபோல் பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சார்பட்டா பரம்பரை கிராக்கிங் ட்ரெயிலர் என குறிப்பிட்டுள்ள ஃபர்ஹான் அக்தர், பாக்ஸிங் இந்திய சினிமாவில் அதற்கான இடத்தை கண்டுபிடிப்பதாக தெரிகிறது.. பெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

பெரிய கம்பேக்

பெரிய கம்பேக்

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெயிலரை பார்த்த இந்த ரசிகர், ட்ரெயிலர் வேற லெவல்.. ஆர்யாவுக்கும் ரஞ்சித்துக்கும் பெரிய கம்பேக்காக இருக்கும்.. இந்த படம் தியேட்டர் மெட்டீரியல் என்றும் பதிவிட்டுள்ளார்.

சூரரைப்போற்று டயலாக்?

சூரரைப்போற்று டயலாக்?

சார்பட்டா பரம்பரை ட்ரெயிலரை பார்த்த நெட்டிசன்,
"பாக்ஸிங் என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா?" என கேட்கும் டயலாக்கை குறிப்பிட்டு இதே மாதிரி....
சூரரைப்போற்று படத்தில் "வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா!" என சூர்யா பேசுவார்.. என்று பதிவிட்டுள்ளார்.

தியேட்டர் மெட்டீரியல்

தியேட்டர் மெட்டீரியல்

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், பிரிலியன்ட் ட்ரெயிலர்.. பக்கா தியேட்டர் மெட்டீரியல்டா என பதிவிட்டுள்ளார்.

ரஞ்சித் ஆன் ஃபயர்

ரஞ்சித் ஆன் ஃபயர்

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், எதிர்பார்த்தது போலவே இன்டென்ஸ் மேக்ஸ் ட்ரெயிலராக உள்ளது.. ரஞ்சித் ஆன் ஃபயர் என குறிப்பிட்டுள்ளார்.

புரட்சி படம் ரெடி

புரட்சி படம் ரெடி

சார்பட்டா பரம்பரை ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், பெரியார் புக் ஒன்னு. கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் தேவையான அளவு. ஒரு டீ ஸ்பூன் கம்யூனிஸம்.. வாணலியை இறக்கி வைத்தவுடன் கருப்பு சிவப்பு தூவி விட்டா "புரட்சி படம்" ரெடி என செஃப் தாமுவின் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

விஸ்வரூப பாய்ச்சல்

விஸ்வரூப பாய்ச்சல்

சார்பட்டா பரம்பரை நிச்சயம் கொண்டாடாடப்படும் பல தலைமுறை ஆர்யா அவர்களின் ஆர்ப்பரிக்கும் விஸ்வரூப பாய்ச்சல். பா ரஞ்சித் அவர்களின் மலைக்கும் மீள்வருகை சரிவில் கிடந்த தமிழ் சினிமாவை மீட்கும் உயரம் பலே வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X