"தல" பிறந்தநாள்.. டாப் பிரபலங்கள் வெளியிடும் காமன் டீபி.. தெறிக்கப் போகுது இணையம்!

சென்னை : நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்காக அஜித் ரசிகர்கள் உருவாக்கிய காமன் டீபி பிரபலங்களால் வெளியிடப்பட உள்ளது.

Recommended Video

Thala Ajith request | Common DP | May Day • Thala 48th Birthday

மே 1 தல அஜித் பிறந்த நாள் ஆகும். ஆனால், ரசிகர்களை பொறுத்தவரை அன்று தான் தீபாவளி, பொங்கல் போன்று, ஏதோ பண்டிகை நாட்களைப்போல கொண்டாடுவார்கள். வாட்ஸ்அப் ஸ்டேடஸ், டீபி, சமூக இணையத்திலும் சரி தலயின் பிறந்தநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த முறை கொரோனாவால், அஜித்தின் பிறந்தநாளன்று அஜித் பட ஸ்பெஷல் ஷோ பார்க்க முடியாது மற்றும் பல கொண்டாட்டங்களும் ரத்தாகி இருக்கிறது.

 Celebrities are releasing the fan-made Common Dp for Ajiths birthday

எப்போதும் ரசிகர்கள் தெருக்களில் தங்களின் நாயகர்களின் பிறந்தநாளை கொண்டாடும் அதே நேரத்தில் இணையத்திலும் வெகுவாக கொண்டாடுவார்கள் அன்று ஒரு நாள் காமன் டீபி என்று ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் அனைவரும் ஒரே படத்தை டீபியாக வைத்து இருப்பார்கள் இந்த காமன் டீபி சில நேரங்களில் பிரபலங்களாலும் லாஞ்ச் செய்யப்படும்.

வரவிருக்கும் தல பிறந்தநாள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது இணையதள அஜித் ரசிகர்கள் இணைந்து தற்போது உருவாக்கியிருக்கும் அஃதாவது வரும் தல பிறந்தநாளுக்கு உருவாக்கியிருக்கும் காமன் டீபியை கிட்டதட்ட 14 பிரபலங்களை வைத்து லாஞ்ச் செய்ய உள்ளனர் என்பது தான் கூடுதல் சிறப்பு அனைத்து பிரபலங்களும் ஒரே நேரத்தில் காமன் டீபியை லாஞ்ச் செய்ய உள்ளனர்.

இது போன்று பெரிய அளவிலான பிரபலங்கள் பிறந்தநாள் காமன் டீபியை ஒரே நேரத்தில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இதிலும் மிக முக்கியமான விஷயம் காமன் டீபியை வெளியிட போகும் பிரபலங்களும் ஏதோ சிறு திரை நட்சத்திரங்கள் கிடையாது. ஆமாம் அனைவரும் மக்களுக்கு மிகவும் பிடித்த பெரிய நட்சத்திரங்கள் தான் .

 Celebrities are releasing the fan-made Common Dp for Ajiths birthday

இந்த காமன் டீபியை வெளியிடபோகும் அந்த பிரபலங்கள் அருண்விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ் , பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் தான் தல பிறந்தநாளுக்கான காமன் டீபியை வெளியிடுபவர்கள்.

 Celebrities are releasing the fan-made Common Dp for Ajiths birthday

தல அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளியாக போகும் காமன் டீபி ஏப்ரல் 26 மாலை 5 மணிக்கு இந்த பிரபலங்களால் வெளியிடபட உள்ளது. ரசிகர்கள் தாங்களே முன் வந்து இந்த பெரிய முயற்சியை எடுத்துள்ளனர். இதற்கு ஆதரவு அளித்து பிரபலங்களும் தங்களின் ஒத்துழைப்பை கொடுத்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X