சாவுல கூட நியாயமில்ல.. உ.பி இளம்பெண் பலாத்காரம்.. மரணம்.. கொதிக்கும் பிரபலங்கள்! #JusticeForManisha

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண். இவர் கடந்த 14ஆம் தேதி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அநத் கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தங்களைப் பற்றிய தகவலை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் நாக்கை அந்த கொடூரக்காரர்கள் அறுத்துள்ளனர்.

எலும்புகளை உடைத்து

எலும்புகளை உடைத்து

மேலும் அவரின் முதுகு தண்டுவடம், கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கொடூரமாக தாக்கி எலும்புகளை உடைத்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பெண் உயிரிழப்பு

பெண் உயிரிழப்பு

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக அந்தப் பகுதியை சேர்ந்த உயர் சாதி வகுப்பை சேர்ந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் நேற்று உயிரிழந்தார்.

உடலை எரித்து

உடலை எரித்து

இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று இரவோடு இரவாக அந்த பெண்ணின் பெற்றோரை கட்டாயப்படுத்தி அவரது உடலை தகனம் செய்ய முயன்றதாக தெரிகிறது. அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதிக்காததால் போலீசாரே தங்களின் வாகனத்தில் கொண்டு சென்று சுடுகாட்டில் வைத்து எரித்ததாக தெரிகிறது.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அம்மாநில முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.

கவின் ஆவேசம்

கவின் ஆவேசம்

இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டியுள்ள நடிகர் கவின்
சாவுல கூட நியாயம் இல்ல.. ஆவேசமாக பதிவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த பெண் குறித்த தகவல்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

ஜனனி அய்யர்

ஜனனி அய்யர்


நடிகை ஜனனி அய்யரும் இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டத்தை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில்
நாக்கு வெட்டி, முதுகெலும்பை உடைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்கள். இந்தியாவின் மற்றொரு மகள் பாலியல் பலாத்காரத்தால் உயிரை இழந்துவிட்டாள்! இந்த கொடுமை முடிவதற்குள் இன்னும் எத்தனை? என பதிவிட்டுள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார்

வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் இதுதொடர்பாக ஆவேசமாக பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்னும் எத்தனை பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும், மீறப்பட்டவர்கள் உங்களுக்காக கொல்லப்பட்டனர் அதிகார நாற்காலியில் இருப்பவர்கள் நம் சமூதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை உணருகிறார்களா? இந்த உலகத்திலா நம் மகள்கள் வளர விரும்புகிறோம்? என கேள்வி குறியோடு முடித்துள்ளார்.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

இதேபோல் பலரும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றம் செய்தவர்கள் மக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும்
#JusticeForHathrasVictim, #JusticeForManisha, #RIPManishaValmiki ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X