twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மசக்கலி 2.0க்கு வலுக்கும் எதிர்ப்பு.. ரஹ்மானுக்கு ஆதரவாக வரிந்துக்கட்டும் பாலிவுட் பிரபலங்கள்!

    |

    சென்னை: மசக்கலி பாடல் ரீமிக்ஸ்க்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    Masakali 2.0 Recreation : A. R. Rahman openly blasts | Delhi 6 Masakali

    அபிசேக் பச்சன், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் டெல்லி 6. இந்தப் படத்தை ராக்கேஷ் ஓம் பிரகாஷ் இயக்கி இருந்தார்.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

    பிரபலமான பாடல்

    பிரபலமான பாடல்

    ஆனால் அந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் ஹிட்டடித்து. குறிப்பாக அந்தப்படத்தில் இடம் பெற்றிருந்த மசக்கலி பாடல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சோனம் கபூரும் அபிஷேக் பச்சனும் கையில் புறாவை வைத்திருப்பது போன்று காட்சியாக்கப்பட்டிருக்கும் அப்பாடல்.

    மசக்கலி 2.0

    மசக்கலி 2.0

    இந்நிலையில், டி சீரிஸ் நிறுவனம் மசக்கலி பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனான 2.0வை நேற்று வெளியிட்டது. இதில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் தாரா சுதாரியாவும் அந்த பாடலில் நடித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல பாடலை இப்படி கெடுத்துவிட்டீர்களே என விளாசி தள்ளினர்.

    தூக்கம் இல்லாமல்

    தூக்கம் இல்லாமல்

    இதனை தொடர்ந்து அப்பாடலின் ஒரிஜினல் வர்ஷனை உருவாக்கிய ஏஆர் ரஹ்மானும் மசக்கலி வெர்ஷன் 2.0க்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எந்த குறுக்கு வழியும் இல்லாமல் முறையாக அமைக்கப்பட்டது. பல இரவுகள் தூங்காமலும் பல முறை எழுதியும் 200 இசைக்கலைஞர்களை கொண்டு 365 நாட்கள் செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்று காட்டமாக கூறியிருந்தார்.

    காதுகளை சேதப்படுத்திவிடும்

    காதுகளை சேதப்படுத்திவிடும்

    ஏஆர் ரஹ்மானின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லி 6 படத்தின் இயக்குநரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா பதிவிட்டுள்ள டிவிட்டில், மசக்கலி பாடல் அன்பு மற்றும் ஆர்வத்துடன் உருவாக்கப்பட்டது ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய பாடல். ரீமிக்ஸை பற்றி எச்சரிக்கையாக இருங்கள், அது உங்கள் காதுகளை சேதப்படுத்திவிடும் என பதிவிட்டுள்ளார்.

    உணர்ச்சியற்ற முறையில்

    உணர்ச்சியற்ற முறையில்

    மசக்கலி பாடலை எழுதிய பாடலாசிரியரான பிரசூன் ஜோஷி பதிவிட்ட டிவிட்டில், மசக்கலி பாடல் மனதிற்கு ரொம்ப நெருக்கமான பாடல். ஆனால் ஒரிஜினலை வைத்து உணர்ச்சியற்ற முறையில் உருவாக்கியிருப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது. டிசீரிஸ் நிறுவனத்தின் மனசாட்சிக்கு தெரியும். ரசிகர்கள் ஒரிஜினலுக்கு ஆதரவாக நிற்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ரஹ்மானுக்கு ஆதரவு

    ரஹ்மானுக்கு ஆதரவு

    சிங்கர் மோகித் சவுகான் ஏஆர் ரஹ்மான் மற்றம் பிரசூன் ஜோஷியின் டிவிட்டுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகை சோனம் கபூரும் பிரசூன் ஜோஷியின் டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். பாடகி ஷ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் அன்கூர் திவாரி ஆகியோரும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Read more about: ar rahman song
    English summary
    Director Rakeysh Omprakash Mehra, lyricist Prasoon Joshi, Singer Mohit Chauhan Actor Sonam Kapoor, Singer Shreya Ghoshal also condems for Masakali remix.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X