திடீர் மாரடைப்பு.. கணவனை இழந்த துயரத்தில் கதறிய மந்திரா பேடி.. இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரபலங்கள்

மும்பை: பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

அவரது மறைவு செய்தி அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் கெளஷல் இறுதிச்சடங்கில் ஹுமா குரேஷி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

கதறி அழுத மந்திரா பேடி

கதறி அழுத மந்திரா பேடி

காதல் கணவர் ராஜ் கெளஷல் திடீரென மாரடைப்பால் காலமானதை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் நடிகை மந்திரா பேடி கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 49 வயதே ஆன ராஜ் கெளஷல் திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இறுதிச்சடங்கில் பிரபலங்கள்

இறுதிச்சடங்கில் பிரபலங்கள்

இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் கெளஷல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பாலிவுட்டின் சில முக்கிய பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர். கதறி அழுத நடிகை மந்திரா பேடிக்கு சில பிரபலங்கள் ஆறுதல் சொல்லும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ஹூமா குரேஷி ஆறுதல்

ஹூமா குரேஷி ஆறுதல்

தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி நடிகை மந்திரா பேடியின் கணவர் இறுதி ஊர்வலத்தில் நேரில் சென்று கலந்து கொண்டு நடிகை மந்திரா பேடிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

குஷ்பு அதிர்ச்சி

குஷ்பு அதிர்ச்சி

மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷல் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த செய்தியை அறிந்த நடிகை குஷ்பு ரொம்பவே அதிர்ச்சியடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரொம்ப சீக்கிரமே எங்களை எல்லாம் விட்டு சென்று விட்டீர்கள், இரண்டு குழந்தைகளை வளர்த்து வரும் மந்திரா பேடி தைரியமாக இருக்க வேண்டும் என்றும் ட்வீட் போட்டுள்ளார்.

அற்புதமான ஆன்மா

அற்புதமான ஆன்மா

டோலிவுட் நடிகை லாவண்யா திரிபாதி தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜ் கெளஷலின் புகைப்படத்தை ஷேர் செய்து, அற்புதமான ஆன்மாவை கொண்டவர் ராஜ். உங்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும், பல இந்திய சினிமா பிரபலங்களும் நடிகை மந்திரா பேடிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X