நாளைக்கு இருப்போமான்னே தெரியல.. பிரபலங்களை உலுக்கிய.. நடிகர் சேதுராமனின் மரணம்
சென்னை: பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான விசுவின் மரணம் தமிழ் திரையுலகை உலுக்கிய சில தினங்களில், இளம் நடிகரும், மருத்துவருமான சேதுராமனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரை நல்லா ஆரோக்கியமாக இருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் திடீரென நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சேதுராமனின் மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியுடன் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சாந்தனு இரங்கல்
நடிகரும் டாக்டருமான சேதுராமன் நேற்று நள்ளிரவு திடீரென உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சேதுவின் மரண செய்தியை அறிந்த மாஸ்டர் நடிகர் சாந்தனு, நாளைக்கு உயிரோட இருப்போமான்னே தெரியல.. வாழ்க்கை அப்படி நிச்சயமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. சேதுவின் ஆத்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
நெஞ்சே வெடித்து விடும்
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்த சேதுவின் உயிரிழப்பு செய்தியை அறிந்த நடிகர் பிரசன்னா, நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு, கோயம்பத்தூரில் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே சேதுவை நன்றாக தெரியும். நல்ல ஆக்டிவ்வான ஆள், இந்த நிலையற்ற வாழ்க்கையை என்ன சொல்வது என தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு இரக்கமே இல்லையா
நெஞ்சை நொறுக்குகிறது.. கடவுளுக்கு இரக்கமே இல்லையா.. வாழ்க்கை நிலையற்றது என்பது நமக்குத் தெரியும், ஆனால் இப்படி ஒரு நிகழ்வு நிச்சயம் அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. சேதுராமன் நல்ல மருத்துவர் மட்டுமின்றி, நல்ல நண்பரும் மனிதரும் கூட, என பிக்பாஸ் மற்றும் நேர்கொண்ட பார்வை புகழ் அபிராமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரு வயசு மகள் இருக்கா
மருத்துவரும் நடிகருமான சேதுராமனுக்கு வெறும் 31 வயது தான் ஆகிறது. சமீபத்தில் திருமணமான இவருக்கு, ஒரு வயசுல மகள் இருக்கா என்றும், நல்ல ஹெல்த்தியான மருத்துவர் சேது எப்படி இப்படி ஹார்ட் அட்டாக்ல உயிரிழந்தார், நம்பவே முடியலையே என கண்ணீர் எமோஜிகளுடன் நடிகை அதுல்யா ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், தனது கிளினிக்கில் சந்தானத்துடன் உரையாடும் வீடியோவை சந்தானம் ரசிகர்கள் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். நல்ல நகைச்சுவை திறனும், சமூக அக்கறையும் கொண்ட சேதுராமன் உயிரிழந்த சம்பவம் சினிமா உலகையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், பலரும் சமூக வலைதளங்களிலேயே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











